Alwar Pasuram


எழில் உடைய அம்மனைமீர்! * என் அரங்கத்து இன்னமுதர் * குழல் அழகர் வாயழகர் * கண்ணழகர் * கொப்பூழில் எழுகமலப் பூவழகர் * எம்மானார் * என்னுடைய கழல் வளையைத் * தாமும் கழல் வளையே ஆக்கினரே! -ஸ்ரீ ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி – 11.2 பொருள்: அழகுமிக்க தாய்மார்களே! என் அரங்கத்தின் இனிமையான அமுதர், திரு முடி அழகர், வாய் அழகர் கண் அழகர்! தனது திருநாபிக்கமலத்தில் இருந்து எழும் தாமரைப் பூ கொண்ட அழகர்! அப்படியான என் பெரியபெருமாள் […]

என் அரங்கத்து இன்னமுதர்


 வாரணமாயிரம் சூழவலஞ்செய்து * நாரண நம்பி நடக்கின்றானென்றுஎதிர் * பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் * தோரணம் நாட்ட கனாக்கண்டேன் தோழீ! நான். 1  நாளை வதுவை மணமென்று நாளிட்டு * பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ் * கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர் * காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான். 2  இந்திரனுள்ளிட்ட தேவர்குழாம்எல்லாம் * வந்திருந்துஎன்னை மகட்பேசி மந்திரித்து * மந்திரக் கோடியுடுத்தி மணமாலை * அந்தரிசூட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான். 3  நால்திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி * […]

? வாரணமாயிரம் பாடல் (Video – duration 5 mins) ?


கண்ணன் யசோதையுடன் விளையாடி, அவள் கையால் அடி வாங்கி, அவள் கையால் கட்டுப்பட்டிருந்த அனுபவத்தை நினைத்து, ‘எத்திறம்! உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே!” என்று ஆறுமாதம் மயங்கி மோஹித்திருந்தாராம் ஸ்வாமி நம்மாழ்வார்! கண்ணனின் எளிமை குறித்து ஆழ்வார்களுக்கு பல அனுபவங்கள். பாராங்குசன், சடகோபன், மாறன் என்றெல்லாம் அழைக்கப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் தன் இறை அனுபவத்தை பாடலாக சொல்லிக் கொண்டு வருகிறார். அவரது சீடரான ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் எழுதிக் கொண்டு வருகிறார். ஒருபாடல்… “பத்துடை அடியவர்க்கு எளியவன்; பிறர்களுக்கு அரிய வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள் மத்துறு கடைவெண்ணெய் களவினில் […]

எத்திறம்! உரலினோடுதிருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் – முதலாழ்வார்கள் வைபவம் ஸ்ரீ பொய்கை ஆழ்வார் ஒருமுறை மிருகண்டு மகரிஷி ஆஸ்ரமத்தில் ஒருவர் மட்டுமே சயனித்துக் கொள்ளக் கூடிய அளவு மட்டுமே இடம் கொண்ட ஒரு சிறிய இடைகழியிலே சயனித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழிந்த வாரே அவ்விடத்தே ஸ்ரீ பூதத்தாழ்வார் வந்து அங்கு தங்குவதற்கு இடம் வேணும் என்று கேட்க “இருவரும் இருக்கலாமே” என்று நினைத்து அவரை சேவித்து வரவேற்று எம்பெருமானுடைய திவ்ய கல்யாண குணங்களையும் பற்றி ஒருவருக்கொருவர் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கையில், அதே இடத்திற்கு ஸ்ரீ […]

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்


ஆநிரை மேய்க்க நீ போதி அருமருந்தாவது அறியாய் கானக மெல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப தேனில் இனிய பிரானே! செண்பகப் பூச்சூட்ட வாராய்! ஸ்ரீ பெரியாழ்வார் அருளிய திருமொழி பாசுரம்.

ஆநிரை மேய்க்க நீ போதி


1
? “உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு நின்னருளே புரிந்திருந்தேன்” ? பெரியாழ்வாருக்கும் எம்பெருமானுக்கும் நடந்த உரையாடல்: பெரியாழ்வார்: “தாமோதரனே! எனது ஆத்மாவுக்கும், என் உடைமையான சரீரத்திற்கும் உன்னுடைய ஸுதர்சனாழ்வானுடைய திருவிலச்சினையை இடுவித்து உன்னுடைய கருணையே புரிந்திருந்தேன். இனி நான் செய்ய வேண்டுவதொன்றில்லை! இப்போது உன்னுடைய திருவுள்ளக்கருத்து என்னவோ?” என்று கேட்க, (திவ்ய பிரபந்தம் – பாசுரம் 5-4-1 – சென்னியோங்கு பதிகம் ) சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு தன்னைவாழ நின்றநம்பீ தாமோதரா சதிரா என்னையும் என்னுடைமையையும்உஞ் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக்குறிப்பே. அதற்கு […]

உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு நின்னருளே புரிந்திருந்தேன்ஸ்ரீ: ஸ்ரீமதே இராமானுஜாய நம: திருப்பல்லாண்டு தனியன் 1: (நாதமுனிகள் அருளிச்செய்தது) குருமுக மனதீத்ய ப்ராஹ வேதாநஷேஷான் நரபதி பரிக்லுப்தம் ஷுல்கமாதாதுகாம: ச்வஷுரமமரவந்த்யம் ரங்கநாதச்ய ஸாக்ஷாத் த்விஜகுலதிலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி விளக்கம்: ஒரு ஆசார்யனின் திருமுகமாக சிறிதும் வித்யாப்யாசம் இல்லாமல், பாண்டிய மன்னனான வல்லபதேவனின் சபையிலே எம்பெருமானின் இயற்கையான இன்னருளினால் பகவத் பரத்வத்தை நிலைநாட்டுவதர்க்காக சகல வேதார்த்தங்களையும் எடுத்துரைத்தவரும், பொற்கிழியைப் பரிசாக வென்றவரும், தேவர்களாலும் வணங்கப் படுபவரும், ஸ்ரீ ரங்கநாதனுக்கு மாமனாரும், பிராமண குல திலகருமான அப்பெரியாழ்வாரை வணங்குகிறேன். திருப்பல்லாண்டு தனியன் […]

திருப்பல்லாண்டு


நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி பாசுரம் (3876)  பாசுரம்: புதுமணமுகந்துகொண்டெறியுமாலோ பொங்கிளவாடை புன்செக்கராலோ அதுமணந்தகன்ற நங்கண்ணன்கள்வம் கண்ணனிற்கொடி தினியதனிலும்பர் மதுமணமல்லிகைமந்தக்கோவை  வண்பசும்சாந்தினில் பஞ்சமம்வைத்து அதுமணந்தின்னருளாய்ச்சியர்க்கே யூதுமத்தீங் குழற்கேயுய்யேன் நான். விளக்கம்: எங்கிருந்தோ பொங்கி வரும் ஒரு இள வாடை, அது மல்லிகையின் மணத்தைச் சுமந்து வரும். கொஞ்ச நேரம் வரும் சின்னமாலைப் பொழுது பெருந்துயரத்தைத் தந்து போகிறது. அப்படி கலந்து பிரிந்த நமது க்ருஷ்ணனுடைய கள்ளச் செயல்கள் கள்வம் அவனிற்காட்டிலும் கொடியதாயிரா நின்றது கொடிது. இன்னமும் அதுக்குமேலே மதுவையும் மணத்தையுமுடைத்தான மல்லிகையினுடைய மெல்லிய ஸரமென்ன, அழகிய குளிர்ந்த சந்த மென்ன, இன் அருளுடைய ஆய்ச்சியர்க்கே அவன் குழல் ஊதுகிறான். பஞ்சம […]

கண்ணனிற் கொடியது அவன் குழலோசை!


2
கிருஷ்ணனை நீராட வருமாறு அழைத்து பெரியாழ்வார் அழகாக பாடுகிறார். கண்ணனின் குழந்தைப் பருவத்தை மிகுந்த ஆர்வத்துடன் அவர் பாடியுள்ளார். எண்ணெய்க் குடத்தை உருட்டி, இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி, கண்ணைப் புரட்டி விழித்து, கழகண்டு செய்யும் பிரானே, உண்ணக் கனிகள் தருவன், ஒலிகட லோதநீர் போலே, வண்ணம் அழகிய நம்பீ, மஞ்சன மாடநீ வாராய்! விளக்க உரை: “எண்ணெய் நிறைந்த குடத்தை உருட்டிவிட்டு, உறங்குகிற சிறு குழந்தைகளை கையால் வெடுககெனக் கிள்ளி எழுப்பி, தூக்கம் விட்டு எழுந்திருக்கச் செய்து, கண் இமையை தலைகீழாக மாற்றி அப்பூச்சி […]

பெரியாழ்வார் திருமொழி பாசுரம் – நீராடல் – எண்ணெய்க் குடத்தைவைகுண்டத்தில் ஜயன், விஜயன் என்னும் (துவார பாலகர்கள்) வாயிற்காப்பவர்கள் இருந்தனர். ஒருநாள், மிகச்சிறந்த யோகிகளான சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகியோர் மகாவிஷ்ணுவையும், திருமகளையும் தரிசிக்க வந்தனர். இவர்கள் ஒரு துளியும் குற்றம், குறையோ, பாவ எண்ணங்களோ அற்றவர்கள். இவர்களை பிரம்மாவின் புத்திரர்கள் என்று கூறுவர். அத்தகைய மகா முனிவர்களை, இந்த துவாரபாலகர்கள் அவமதித்து பெருமாளைத் தரிசிக்க அனுப்பவில்லை. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, திருமகளுடன் தாமே நேரில் வந்து காட்சியளித்தனர். அதுமட்டுமில்லாமல், தன்னை அவமதித்தாலும் தன் அடியவர்களை அவமதிப்பதைப் பொறுக்காத, […]

அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்த பெருமாள்