Alwar Pasuram


2
கிருஷ்ணனை நீராட வருமாறு அழைத்து பெரியாழ்வார் அழகாக பாடுகிறார். கண்ணனின் குழந்தைப் பருவத்தை மிகுந்த ஆர்வத்துடன் அவர் பாடியுள்ளார். எண்ணெய்க் குடத்தை உருட்டி, இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி, கண்ணைப் புரட்டி விழித்து, கழகண்டு செய்யும் பிரானே, உண்ணக் கனிகள் தருவன், ஒலிகட லோதநீர் போலே, வண்ணம் அழகிய நம்பீ, மஞ்சன மாடநீ வாராய்! விளக்க உரை: “எண்ணெய் நிறைந்த குடத்தை உருட்டிவிட்டு, உறங்குகிற சிறு குழந்தைகளை கையால் வெடுககெனக் கிள்ளி எழுப்பி, தூக்கம் விட்டு எழுந்திருக்கச் செய்து, கண் இமையை தலைகீழாக மாற்றி அப்பூச்சி […]

பெரியாழ்வார் திருமொழி பாசுரம் – நீராடல் – எண்ணெய்க் குடத்தை


வைகுண்டத்தில் ஜயன், விஜயன் என்னும் (துவார பாலகர்கள்) வாயிற்காப்பவர்கள் இருந்தனர். ஒருநாள், மிகச்சிறந்த யோகிகளான சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகியோர் மகாவிஷ்ணுவையும், திருமகளையும் தரிசிக்க வந்தனர். இவர்கள் ஒரு துளியும் குற்றம், குறையோ, பாவ எண்ணங்களோ அற்றவர்கள். இவர்களை பிரம்மாவின் புத்திரர்கள் என்று கூறுவர். அத்தகைய மகா முனிவர்களை, இந்த துவாரபாலகர்கள் அவமதித்து பெருமாளைத் தரிசிக்க அனுப்பவில்லை. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, திருமகளுடன் தாமே நேரில் வந்து காட்சியளித்தனர். அதுமட்டுமில்லாமல், தன்னை அவமதித்தாலும் தன் அடியவர்களை அவமதிப்பதைப் பொறுக்காத, […]

அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்த பெருமாள்


ஸ்ரீமன் நாராயணன், அடியார்க்கு அடியாராக இருப்பவர்களை ரட்சித்து அருள்பவன்: ‘நம் ஆழ்வார்’ என இறைவனாலே பெயரிடப்பட்ட நம்மாழ்வார் பக்தியில் மூர்ச்சையாகி , மூர்ச்சையாகி , பின் பல நாட்கள் சுய நினைவின்றி மீண்டு மீண்டும், அந்த பரந்தாமனைப்பற்றி பாடல்கள் எழுதுவாராம். ஆழ்வாரின் பக்தி சிறப்பானது!! நம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர் மதுரகவியாழ்வார் , இவர் திருக்கோளூரில் பிறந்தவர் , வட நாட்டிலிருந்து , ஒரு கேள்விகுடைந்தெடுக்க பதில் தேடி ஒர் ஒளிக்காட்டிய வழியில் பயணித்து , நம்மாழ்வாரை சரணடைந்தவர். ! மற்ற ஆழ்வார்கள் திருமாலை […]

ஸ்ரீமன் நாராயணன் அடியார்க்கு அடியாராக இருப்பவர்களை ரட்சித்து அருள்பவன்1
கண்ணன் பிறந்த இரவில் மோகனத் தாலாட்டு: எத்தனையோ தாலாட்டுகள் பாடினாலும், குட்டி கிருஷ்ணனின் தாலாட்டு மோகனத் தாலாட்டு அல்லவா? கண்ணன் பிறந்த இரவு. இந்த இரவு மிகவும் கடினமான இரவு, குழந்தைக்கு! சிறை விட்டு, ஆற்றைக் கடந்து, ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, இடி மின்னல், புயல் மழையில்… பிறந்ததுமே பயணம் தொடங்கி விட்டது! உலகத்தையே பயணிக்க வைக்கும் குழந்தை, இன்று, தானே பயணிக்கிறது! ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒர் இரவில், ஒருத்தி மகனாய் வளர.. விதிப்பவன் தனக்கே விதித்துக் கொண்டான்!! […]

கண்ணன் பிறந்த இரவில் மோகனத் தாலாட்டு


ஆயர்ப்பாடி என்ன சுயம்வரம் நிகழும் இடமோ!? “பத்துநாளும் கடந்த இரண்டாநாள்* எத்திசையும் சயமரம் கோடித்து* மத்தமாமலை தாங்கிய மைந்தனை* உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே” – பெரியாழ்வார் திருமொழி குழந்தை கண்ணன் பிறந்த பன்னிரண்டாம் நாளன்று, ஆயர்பாடியின் எல்லா இடங்களிலும், ஊரில் ஒரு தெரு விடாது, எல்லா இடங்களிலும், ஆயர்ப்பாடி முழுவதும் நன்மைக்கும், மங்கலத்திற்கும் அறிகுறியான வெற்றித் தூண்கள் நடப்பட்டு, வண்ண வண்ணத் தோரணங்கள் கட்டி சுயம்வரம் நிகழும் இடத்தினைப் போல் அலங்கரித்திருந்தனர். பிறந்த குழந்தையை உடனே எங்கும் வெளியில் கொண்டு வர மாட்டனர்; […]

ஆயர்ப்பாடி என்ன சுயம்வரம் நிகழும் இடமோ!?