உறக்கத்திலே உபசரிக்கும் கிருஷ்ணன்


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் 2

யசோதையிடம் கதை கேட்ட குழந்தை கிருஷ்ணன் ஆயர்பாடியில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறான். பக்கத்தில் அன்னை யசோதையும் சிறிது கண்ணயர்ந்திருக்கிறாள்.

திடீரென்று கிருஷ்ணன் யாரையெல்லாமோ தடபுடலாக வரவேற்கிறான். பெரிய மஹாராஜா போன்று குழந்தையான அவன் உபசரிப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

“சம்புவே! வருக, வருக! தங்கள் வரவு நல்வரவாகட்டும்; இங்கே வந்து உட்காருங்கள். பிரம்மாவே, வாருங்கள், இப்படி என் இடது பக்கத்தில் உட்காரலாமே! கிரவுஞ்ச மலையை அழித்தவனே, சுப்ரமண்யனே, சௌக்கியமா? தேவேந்திரனே, உம்மைக் கண்டு நீண்ட நாட்களாகி விட்டனவே,” எனத் தூக்கத்தில் – ஆம், உறக்கத்தில் தான் கிருஷ்ணன் பேசுகிறானாம்.

இதைக் கேட்ட யசோதை, “குழந்தாய்! தூக்கத்தில் என்ன பிதற்றிக் கொண்டிருக்கிறாய்? உஷ்! பேசாமல் தூங்கு,” என்று அதட்டுகிறாளாம். இந்த அதட்டல் நம்மைக் காக்கட்டும்.

Note about Author Shri Leelasukar:

Sree Krishna Karnamrutham‘ is a work composed in Sanskrit by the poet Shri Bilvamangala Swami. There are 328 slokams in this masterwork. He acquired the name ‘Leelasukar’ because of his becoming immersed in the Leela of Krishna!

Sri Leela Sukar’s KrishNa Karnamrutam slokas were nicely translated by Dr. Smt. Saroja Ramanujam Madam, M.A., Ph.D, So we could enjoy each slokam about Krishna leela.

It is a great privilege to be associated with Smt Saroja Ramanujam Madam to go through 3 volumes of her translated work.

#KrishnaKarnamrudham

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *