ஸ்ரீமதே இராமாநுஜாய நம:
🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹
ஸ்வாமி கூரத்தாழ்வான் பாடிய 2 ஸ்லோகங்கள், ஸ்ரீ பராசர பட்டர் பாடிய 1 ஸ்லோகம், பூர்வாசார்யர்கள் பாடிய முக்தகம் – 4 ஸ்லோகங்கள், ஜீயர் நாயனார் பாடிய கடைசி ஸ்லோகம், இவற்றின் தொகுப்பே பராங்குஷாஷ்டகம்.
ஸ்ரீ பராங்குச அஷ்டகம் தனியன்கள்
🌻 தனியன் 1 – ஸ்வாமி கூரத்தாழ்வான்
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதீ மஹே |
யதுக்தய ஸ்த்ர யீ கண்டே யாந்தி மங்கள சூத்ர தாம் ||
🌼 தனியன் 2 – ஸ்ரீ பராசர பட்டர்
ஸ்ரீ பராஸர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||
ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகங்கள்
ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 1
த்ரைவித்ய வ்ருத்த ஜன மூர்த விபூஷணம் யத்
ஸம்பச்ச ஸாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம் |
யத்வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத்ஸம் ஸ்ரேயம வகுளா பரணாங்க்ரி யுக்மம் ||
🌻 பொருள்:
யாதொரு நம்மாழ்வார் திருவடி இணையானது பரம வைதிகர்களுடைய முடிக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ – யாதொரு திருவடி இணையே சர்வ காலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமுமாக இருக்கின்றதோ – யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றில்லாதவர்களுக்குத் தஞ்சமாய் இருக்கின்றதோ – அப்படிப் பட்ட பரம பாவனமான நம்மாழ்வாரது திருவடி இணையை ஆச்ரயிக்கக் கடவோம்
🍀 Paraankusha Ashtakam – Slokam 1
Traividya vruddha jana moordha vibhooshanam yat
Sampachcha saathvika janasya yadheva nithyam
Yadvaa sharanyam asharanyajanasya punyam
Tat samshrayema vakulaabharanaanghri yugmam
“தந்தோம்! தந்தோம்” என எம்பெருமான் திருவாய் மலர்ந்தருளிய பின், நம்மை உய்விக்க மீண்டும் எழுந்தருளிய ஸ்ரீ நம்மாழ்வாரின் திருநாமங்களை – ஸ்ரீ ஸூக்திகளை பாடுவோமாக!
– அடியேன் இராமானுஜ தாஸன் திருக்குருகூர் கண்ணன்
மாறன் நாமம் பாடுவோம்! மகிழ் மாறன் பாடுவோம்!
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!
Go to Slokam 2 (Next Slokam)
adiyen, excellent pics and explanation. parangusa pancha vimshati meaning kidaikkuma adiyen