ஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது 11


ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:

ஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்லோகங்கள்.

அனைத்து உலகுக்கும் தாயாரான பெரிய பிராட்டியார் ஸ்ரீ ரங்கநாயகி தாயாரின் பெருமைகளை சொல்லும் 11 ஸ்லோகங்கள்.

(Kindly scroll down to play and listen to Slokam audio as well as read English version #ஸ்ரீஸ்தவம்

 தனியன் (ஸ்ரீ பராசர பட்டர் அருளியது) 

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதீ மஹே |

யதுக்தய ஸ்த்ர யீ கண்டே யாந்தி மங்கள சூத்ர தாம் ||

பொருள்:
“நாராயண பரத்வமாகிய மங்கல நாண் பூண்டவள் வேத மாதா எனத் தம் ஸ்தோத்ரங்களால் காட்டியருளிய ஸ்வாமி கூரத்தாழ்வானுக்கு நம் வணக்கங்கள்.”

 ஸ்ரீ ஸ்தவம் – ஸ்லோகம் 1
“ஸ்வஸ்தி ஸ்ரீர்திசதாத் அசேஷ ஜகதாம்
ஸர்கோபஸர்க்க ஸ்திதி தீ:
ஸ்வர்க்கம் துர்கதிமா பவர்க்கிக பதம்
ஸர்வஞ்ச குர்வன் ஹரி:” |

“யஸ்யா வீக்ஷ்ய முகம் ததந்கிதபராதீனோ
விதத்தே சகிலம்
கிரீடேயம் கலு நான்ய தாசஸ்ய ரஸதா
ஸ்யாதை கரஸ்யாத்தயா” ||

 விளக்கம் 
பகவான் ஹரி நாராயணன் உலகில் படைத்தல், அழித்தல் மற்றும் காத்தல் என்று எல்லாம் செய்யும்போது, பிராட்டியின் அழகான முககுறிப்பு இணக்கத்திலேயே பகவான் இவைகளை செய்கிறான். இத்தகைய சக்தியுடைய, எல்லா காலங்களிலும், இடங்களிலும் அகல கில்லேன் இறையும் என்ற ‘ஸ்ரிய பதி’ பகவானுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கிற விஷ்ணு பத்னியாகிய பிராட்டியே! மிகுந்த பக்தியும்,ஞானமும் அளித்து என்னை ரக்ஷிப்பாயாக!

Sri Sthavam slokam – To Listen and Chant (6 minutes)

Audio by Shri U.Ve. Srinidhi Akkarakkani swami


 Sri Sthavam composed by Sri Koorathazhwan 

Thaniyan (Composed by Sri ParAsara Bhattar)
srIvathsa chinna misrEbyO nama ukthima dhImahE:
yadhukthayas thrayi gaNtE yaanthi mangaLa sUthradhAm:

Meaning:”We offer our obeisances towards srIvathsAnga misra whose divine sthOthrams are like mangaLasUthram for vEdham, i.e., they reveal that srIman nArAyaNan is the supreme clearly.”

Sri Sthavam slokam 1:
“Svasthi SrIr-disathAdh asEsha-jagathAm sargOpasargasTithee:
svargam dhurgathim Aapavargakika padham sarvam cha kurvan Hari:” |

“YasyA Veekshya mukham tadhingitha-parAdhInO-vidhatthE akhilam
kreeDEyam khalu nAnyaTAasya rasadA syadaikarasyAth tayA” ||

 Meaning 
BhagavAn SrI Hari NaaraAyanan takes His cues in the matters of Creation (Sarga:), Dissolution (Upasarga:), Protection (sTithee:), by seeking concurrence from the expressions in
the beautiful face of His Consort. The world of DevAs (Svargam), Narakam (Dhurgathi), Sri Vaikuntam/Moksha sTAnam (Aapavargika padham) and all other worlds are under His sway and He rules over them (Sarvam cha kurvan Hari:).

He executes all these tasks by taking the directions/cues from the hints (ingitham) originating from Piraatti’s auspicious face (Thirumukha MaNDalam). He is thus under Her total
influence, and performs His work according to Her wishes.

He is Sri Devi ParAdheenan, since He wants to please Her. He looks at Her face for the different signals and completes every thing according to Her wish (YasyA: Mukham Veekshya,
tadhingitha ParAdheena: akhilam vidhatthE).

May SrI Devi of such power and who is united with Him at all times, places and states (Eikarasyam) confer auspiciousness on me to undertake this onerous task (asEsha JagathAm SrI: Svasthi disatAdh).

About Sri Sthavam:
There are 11 slOkams in Sri Sthavam of Sri KurEsa. The first five are called Sthotropodhgaatam or introductory verses that express the author’s disqualifications to engage in praising the most auspicious Sri Devi. Here KurEsa states that he is acutely aware of his limitations as a poet to
undertake such an impossible task. From verse 6, the actual stotram begins (Stotraarambham).
The ninth and the tenth verses are in the form of his Prapatti at Her Lotus feet. The eleventh and the final verse of this #SriSthavam is a prayer to Her to cast Her benevolent glances on him and protect him and us as the prapannas seeking refuge in Her.

Pranams to U.Ve.Srinidhi Akkarakkani swamy. Indebted to swamy for the great inspiration to learn and chant this beautiful slokam.

அடியேன் இராமானுஜ தாஸன்  திருக்குருகூர் கண்ணன்

ஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ரங்கநாயகி தாயார் திருவடிகளே சரணம்


 ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 2 

ஹே ஸ்ரீர் தேவி சமஸ்த லோக ஜநநீம்
த்வாம் ஸ்தோதுமீஹா மஹே
யுக்தாம் பாவய பாரதீம் ப்ரகுணய
ப்ரேம ப்ரதாநாம் தியம் |

பக்திம் பந்தய நந்தயாஸ்ரிதம் இமம்
தாஸம் ஜனம் தாவகம்
லக்ஷ்யம் லக்ஷ்மி கடாக்ஷ வீசிவிஸ்ருதே:
தே ஸ்யாம சாமீ வயம் ||

விளக்கம் 
“ஹே ஸ்ரீரங்கநாயகி தாயாரே! அனைத்து உலகுக்கும் தாயானவளே! உனது பெருமைகளை புகழ்ந்து பாடுவதற்கு வாக்கு, அன்பு கலந்த ஞானம் அருள வேணும். என்னுடைய பக்தியானது பரம பக்தியாக வளர அருள வேணும். உன் திருவடி தாமரையில் சரணடைந்து உனக்கு கைங்கர்யம் செய்பவனாக ஏற்றுக்கொண்டால் நான் மிகுந்த ஆனந்தம் கொள்வேன்! உன்னுடைய கருணை மிக்க பார்வையை எங்கள் மேல் கடாக்ஷித்து அருள வேணும்” என்று கூரத்தாழ்வான் பிரார்த்திக்கிறார்.

ஸ்ரீ ஸ்தவம் – ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிசெய்த, ஸ்ரீ ரங்கநாயகி நாச்சியாரின் பெருமைகளை சொல்லும் ஸ்லோகங்கள். #ஸ்ரீஸ்தவம்

 Sri Sthavam Slokam – 2 
Hey SrirdEvi! Samastha lOkajananeem thvAm stOthumeehAmahE
yukthAm bhAvaya Bharatheem praguNaya prEmapradhAnam dhiyam |

bhakthim bhandhaya nandayAsrithamimam dhAsam janam thaavakam
lakshyam Lakshmi! KaDAkshaveechivisruthE: tE syAma chAmee vayam ||

Meaning:
“Oh Maha Lakshmi! You are the mother of the entire universe and its inhabitants. I wish to offer my praise to You. Please grant me the gift of Vak (Speech) appropriate for this task!

Please grow my intellect and devotion to carry out this undertaking! May my Bhakthi become Parama Bhakthi through Your blessing!

Please accept my Kainkaryam as that coming from one, who has surrendered at Your Lotus feet. Please make me joyous through the acceptance of my Vaachika Kaimkaryam! May we the Prapannas become the object of the waves of Your most merciful and compassionate glances!”

Prayer here is for the people of the land and for those, who belong to the Thondar Kulam. Sri Koorathaazhwan prays for the waves of SrI Devi’s glances to fall on all in this slokam. #Sristhavam.
Sri Sthavam slokams were composed by Sri Koorathaazhwan, praising Sri Ranganayaki Thayar. #Sri_Sthavam

ஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ரங்கநாயகி தாயார் திருவடிகளே சரணம்


 ஸ்ரீ ஸ்தவம் – ஸ்லோகம் – 3 

ஸ்தோத்ரம் நாம கிமா மநந்தி கவயோ
யத்யந்யதீயான் குணாந்

அந்யத்ர த்வஸதோசதிரோப்ய பணிதி:
ஸா தர்ஹி வந்த்யா த்வயி |

ஸம்யக் ஸத்யகுணாபி வர்ணா நமதோ
ப்ரூயு: கதம் தாத்ருசீ

வாக்வாசஸ்பதி நாபி சக்யரசநா
த்வத்ஸத் குணார்ணோநிதௌ ||

 விளக்கம் 
“இருக்கிறதை இருக்கு என்று பாடுவது ஒரு வகை ஸ்தோத்ரம்..இல்லாததை இருக்கு எனபது ஏற்றி சொல்வது அடுத்த வகை. தேவி! உன் இடத்தில் எல்லாம் உள்ளன. பல நிதி முத்துக்கள் கடலில் உள்ளது போல உயர்ந்த கல்யாண குணங்கள் இருக்கும் போது எனது சின்ன வாக்கால் எப்படி பாட முடியும்? ஹயக்ரீவர் ஆக இருந்தாலும் முடியாது. ” என்கிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.

பராசர பட்டர் ஆயிரம் நாக்கு கேட்டு பின்பு பாட சக்தி இல்லை என்றார். முடியாது என்று சொல்ல ஆயிரம் நாக்கு வேணும் என்பது போல. பெரிய பிராட்டியாரின் கல்யாண குணங்களை பாடிக்கொண்டே இருக்கலாம், இதற்கு எல்லையே இல்லை.

#ஸ்ரீஸ்தவம்

 Sri Sthavam – Slokam – 3 
sthOthram nAma kimAmananthi kavayO yadhyanyadheeyAn guNAn

anyatra thvasathOadhirOPya phaNithi: saa tarhi vandhyA thvayee |

amyaksathyaguNAbhivarNanamaTO BhrUyu: kaTam thAdhrusee

vaag VachaspathinAapi sakhyarachanA thvathsadhguNAarNOnidhou ||

Meaning :
In the previous verse, KurEsa said: “tvaam SthOthum Yeehaamahe”. He expressed his desire to praise Her. Now he elaborates on the difference between his Stotra Sabdhaarthams and that of others. He says that the common poets praise either gunaas that are not there in the subject
being praised or drably describe the limited qualities of their subject.
Some common poets describe the qualities correctly, but find that there is a limited quantity of particulars to describe about their subject. There is not much to praise.

KurEsa reveals that he is not hampered by either of these two difficulties, when he attempts to praise Maha Lakshmi and Her KalyaaNa GuNaas.

There is no problem of exaggeration in Her case, since She has all the auspicious qualities to a state of perfection. Her
KalyaaNa GuNaas are also so abundant that there is no shortage on the subject matter to praise.

Her KalyaaNa GuNaas are limitless and there is no possibility of exhausting them or exaggerating them. Even Hayagreevar, the Lord of speech can not succeed in describing adequately Your vast sea of auspicious guNams.#Sristhavam


 ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 4 
யே வாசாம் மநஸாம் ச துர்க் ரஹதயா
க்யாதா குணாஸ் தாவகா :

தாநேவ ப்ரதி ஸாம்பு ஜிஹ்வ முதிதா
ஹை மாமிகா பாரதீ |

ஹாஸ்யம் தத்து ந மன்மஹே
ந ஹி சகோர் யேகாகிலம் சந்ரித்காம்

நாலம் பாதுமிதி ப்ரக்ருஹ்ய ரசநாம்
ஆஸீத ஸத்யாம் த்ருஷி ||

 பொருள் 
“ஹே மஹாலக்ஷ்மி! உன்னுடைய கல்யாண குணங்களை என்னுடைய நாக்காலோ அல்லது மனதாலோ பாடி முடிக்க முடியாது! பாடிக்கொண்டே இருக்கலாம், பாடுவதில் வாக்கு ஓடுகிறது. தண்ணீர் உடன் கூடிய ரசத்துடன் கூடிய நாக்கு துடிக்கிறது.

‘சகோரி’ என்னும் பறவை சந்திர கலை உருகுமா என்று கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கும். சந்திரனின் குளிர் கதிர்களை உணவு என்று எண்ணி குடிக்கும்,
தன்னால் முடியாது என்று தெரிந்தும் தன்னை முழுவதுமாக இதில் ஈடுபடுத்திக் கொள்கிறது. இதேபோல், நானும் என் முயற்சியை விடாது, உன்னுடைய கல்யாண குணங்கள் அனைத்தையும் பாடி போற்றிக்கொண்டே இருப்பேன்” என்று இந்த ஸ்லோகத்தில் பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.

ஸ்ரீ ஸ்தவம் – ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிசெய்த, ஸ்ரீ ரங்கநாயகி தாயாரின் பெருமைகளை சொல்லும் ஸ்லோகங்கள். #ஸ்ரீஸ்தவம்

 Sri Sthavam Slokam – 4 
yE vaachAm manasAm cha dhurgrahatayA khyAthA guNasthAvakA:
thAnEva prathi sAmBhujihvamudhithA hai mAmikA bhArathee |

hAsyam tatthu na manmahE na hi chakOryEkAakhilAm chandrikAm
naalam pAthumithi pragruhya rasanAmaaseetha sathyAm thrushi ||

Meaning:
“Oh Maha Lakshmi! It is impossible to praise adequately Your KalyaaNa GuNaas with tongue or mind and do justice to them. It therefore becomes a laughable matter, when one attempts to go about this impossible task.

My effort is like that of the Chakora bird that does not hold back its tongue and engages itself in drinking gluttonously ALL of the cool rays of the moon as its food, while being fully aware of its limited power to complete that impossible task. Similarly, I am not holding back in my effort to praise all of Your KalyaaNa GuNaas adequately.” says Sri Koorathaazhvan. #Sristhavam

ஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ ரங்க நாயகி தாயார் திருவடிகளே சரணம்!


 ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 5 
க்ஷோதீயா நபி துஷ்ட புத்திரபி
நி:ஸ்நேஹோப்ய நீஹோபி தே

கீர்த்திம் தேவி லிஹன்நஹம்
ந ச பிபேம் யஜ்ஞோ ந ஜிஹ்ரேமி ச |

துஷ்யேத்ஸா து ந தாவதா ந
ஹிஸுனா லீடாபி பாகீரதீ

துஷ்யேச்ச்வாபி ந லஜ்ஜதே ந ச பிபேத்
யார்திஸ்து ஶாம்யேச்சுந: ||

 பொருள் 
“ஹே மஹாலக்ஷ்மி! உன்னை போற்றிப் பாடுவதற்கு எனக்கு அறிவு இல்லை, அனுஷ்டானமும் இல்லை. இந்த வரம்புகள் இருந்தபோதிலும், என் வாக்கினால் உன்னை பாடிப் போற்றுவதால் உன்னுடைய புனிதத்துவம் குறைந்து விடுவதில்லை யன்றோ.

நாய் தாகத்தால் கங்கையில் தண்ணீர் குடித்தால் கங்கைக்கும் தோஷம் இல்லை ..அதற்கும் தாகம் தீரும்..அது போலவே நான் உன்னை பாட முற்படுவது. ராவணனையும் திருத்த முயன்ற தேவியே! அடியேன் உன்னை பாட முற்பட்டால் அதை ஏற்க மாட்டாயா? லங்கையிலிருந்த ராக்ஷசிகள் சரணம் என்று சொல்லாமலே அவர்களை ரக்ஷித்த பெருமையுடையவள் நீ அன்றோ! ” என்று இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ கூரத்தாழ்வான் பாடுகிறார்.
#ஸ்ரீஸ்தவம்

 Sri Sthavam Slokam – 5 
shOdheeyAnapi dhushta Buddhirapi nissnEhOapya neehOapi tE
keerthim Devi lihannaham na cha BhibhEmyajnO na jihrEmi cha |
dhushyEth saa thu na thAvathA na hi sunA leeDApi BhageeraTee
dhushyEcchvapi na lajjathE na cha BhibhEthyArthisthu shAm yEcchuna: ||

Meaning:
“Oh Maha Lakshmi! I am not ashamed to engage in my praise of You in spite of my inadequacies and disqualifications. I know that I have neither exemplary conduct nor a sharp intellect informed by Sastra Jnanam.

In spite of these limitations, my praise of You will not become impure. The situation is similar to the lowly dog licking the most sacred waters of Ganga to quench its thirst. The River Ganga is not polluted by the dog’s act and the dog gets its thirst quenched. Here KurEsa equates the sanctity of Maha Lakshmi to the holiness of Ganga and himself to the undeserving dog.” says Sri Kuresan. #Sristhavam

ஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ரங்கநாயகி தாயார் திருவடிகளே சரணம்


 ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 6 
முதல் ஐந்து ஸ்லோகத்தில் ஸ்ரீ கூரேஸர், தாம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை புகழ்ந்து பாடுவதற்கு தகுதியற்ற தன்மையை சொல்லுகிறார். ஆறாவது ஸ்லோகத்திலிருந்துதான் ‘ஸ்தோத்ர ஆரம்பம்’.

ஐஸ்வர்யம் மஹதேவ வால்பமதவா
த்ருஶ்யேத பும்ஸாம் ஹி யத்

தல்லக்ஷ்ம்யா: ஸமுதீக்ஷணாத்தவ யதஸ்
ஸார்வத்ரிகம் வர்ததே |

தேநைதேந ந விஸ்ம யேமஹி
ஜகந்நாதோபி நாராயண:

தந்யம் மந்யத ஈக்ஷணாத்தவ யதஸ்
ஸ்வாத்மாநமாத்மேஶ்வர: ||

 பொருள் 
“ஹே ரங்கநாயகி! செல்வம் இரண்டு வகையானது என்று கூறப்படுகிறது. ஒன்று, பூமியில் அனுபவிப்பது. மற்றொன்று ஸ்ரீ வைகுந்தத்தில் முக்தியடைந்தவர்கள் மற்றும் நித்திய சூரிகள் ஆகியோர் அனுபவிப்பது.
இந்த இரு வகையான செல்வங்களும் அவர்கள் மீது விழுந்த உம்முடைய கடாக்ஷத்தின் விளைவாக அன்றோ கிடைக்கப் பெற்றன!

‘பெரியதோ, சிறியதோ, லக்ஷ்மி கடாக்ஷத்தால் கிடைக்கப் பெற்றது’ என்கிற கூற்று கேட்டு எனக்கு ஆச்சர்யம் இல்லை. ஆத்மேச்வரனாக, அதாவது தனக்கு ஈச்வரன் அற்றவனான, அந்த ஜகந் நாதன் உம்முடைய கடாக்ஷம் கிட்டி தன்யனாக எண்ணுகிறான்” என இந்த ஸ்லோகத்தில் பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.

வாமன அவதாரத்தில் எம்பெருமான், பக்த ப்ரகலாதனின் பேரன் மகாபலியிடம் மூன்றடி மண் தானமாக கேட்கும்போது தன்னுடைய மார்பை வஸ்திரத்தால் மூடிக்கொண்டு தானம் வாங்கினானாம். ‘சிறிது நேரமும் விட்டுப் பிரியேன்’ என்று பெரிய பிராட்டியார் நித்தியவாசம் செய்கின்ற திருமார்பினையுடையவன் அன்றோ! பிராட்டி கடாக்ஷம் பட்டால் மகாபலியிடம் சொத்தை வாங்க முடியாது.

‘திருவுக்கும் திரு வாகிய செல்வா’ என்று ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பாடுகிறார். (பெரிய திருமொழி ஏழாம் பத்து) அதாவது ‘ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கும் லக்ஷ்மீகரனான செல்வனே!’ என்று.
எம்பெருமான் ஸ்ரீக்கும் ஸ்ரீயாயிருப்பனென்றால் என்ன கருத்தென்னில்; ஸ்ரீ என்றாலும் திரு என்றாலும் ‘அதிசயத்தை விளைவிப்பவள்’ என்று பொருள் கொள்ளத்தக்கது; எல்லார்க்கும் அதிசயத்தை விளைப்பவளான அவள் தனக்கும் அதிசயத்தை விளைப்பவன் எம்பெருமான் என்றவாறு.
பிராட்டிக்கு எம்பெருமானுடைய ஸம்பந்தத்தினால் அதிசயம்; எம்பெருமானுக்குப் பிராட்டியின் ஸம்பந்தத்தினால் அதிசயம்.
(ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரையிலிருந்து..) #ஸ்ரீஸ்தவம்
Sri rangam Sri RangaNayaki Thayar oonjal Sevai

 Sri Sthavam Slokam – 6 
Aiswaryam mahadhEva vAalpmaTavaa dhrusyEta pumsAm hi yath
tallakshmyA: samudheekshaNAth tava yatha: sArvathrikam vartatE |

tEnaitEna na vismayEmahi JagannATOapi NaarAyaNa:
dhanyam manyatha eekshaNAth tava yatha: svAthmAnamAthmEswara ||

? Meaning ?
There are 11 slOkams in Sri Sthavam of Sri Koorathazhwan. The first five are called ‘Sthotropodhgaatam’ or introductory verses that express the author’s disqualifications to engage in praising the most auspicious Sri Devi. Here KurEsa states that he is acutely aware of his limitations as a poet to undertake such an impossible task.

From verse 6, the actual stotram begins (Stotraarambham).

“Oh RanganAyaki! It is said that wealth is of two kinds. One is that, which is experienced here on earth (Eihikam) and the other experienced in Sri Vaikuntam by Mukthas and Nitya Suris (Aamushmikam).
Both these types of wealth are enjoyed by a fortunate few as a result of the anugraham of your merciful glances falling on them. The beneficial impact of those glances do not surprise us one bit!

The reason for our belief is that we know already that Your Lord, who is His Own Master, considers Himself Kruthaarthan (one, who achieved the purpose of his mission), when your glances fall on Him” KurEsa summarizes the special blessed status of Sriman Narayana. #Sristhavam

 மொழியைக் கடக்கும் பெரும் புகழான் ஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்! 

 பெரிய பிராட்டியார் ஸ்ரீ ரங்க நாயகி தாயார் திருவடிகளே சரணம்! 


 ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 7 
ஐஸ்வர்யம் யதஶேஷ பும்ஸி யதிதம்
ஸௌந்தர்ய லாவண்யயோ:
ரூபம் யச்ச ஹி மங்களம் கிமபி
யல்லோகே ஸதித்யுச்யதே |

தத்ஸர்வம் த்வததீநமேவ யதத:
ஸ்ரீரித்யபேதேந வா
யத்வா ஸ்ரீமதிதீத்ருஶேந வசஸா
தேவி ப்ரதாமஷ்நுதே ||

 பொருள் 
“ஸ்ரீ ரங்கநாச்சியாரே! இவ்வுலகில் செல்வம், அழகு, நற்குணம் போன்ற ஐஸ்வர்யங்கள் உன்னுடைய ஸம்பந்தத்தில், உனக்கு அடங்கியதாக உள்ளது. அவை அனைத்தும் “ஸ்ரீ” என்ற உன்னை விட வேறானது இல்லை – என்பதன் மூலமாகவோ அல்லது ‘ஸ்ரீயை உடையது’ என்ற சொல் மூலமாகவோ அல்லவா பெருமை அடைகிறது!?” என்று பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்.

இங்கு ஸ்ரீ கூரேசர் இரண்டு வகையான ‘ஸ்ரீ’ சப்தத்தை குறிப்பிடுகிறார். “திருப்பதி”, “திருமங்கை”, “திரு விளக்கு” – இவை ஒருவகை. “ஸ்ரீமத் பாகவதம்”, “ஸ்ரீமத் ராமாயணம்” – இவை இரண்டாவது வகை.

திருப்பதி மலையில் ஏறாமலே ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார், திரு மேனி ஒளியை வீசி சேர்த்து ‘திரு’ மலை என்று சொல்ல வைத்தாள் அன்றோ! #ஸ்ரீஸ்தவம்

 Sri Sthavam Slokam – 7 
Aiswaryam yadhasEsha pumsi yadhidham soundarya-lAvaNyayO:
roopam yasccha hi mangaLam kimapi yallOkE sadhithyuchyatE |
tath sarvam thvadheenamEva yadhata: SrIrithyabhEdhEna vaa
yadhvaa SrImadhitheedhrusEna vachasA Devi! praTAmasnuthE ||
 Meaning 
“Oh Consort of Ranganatha! Whatever blessings a Chetana possesses as Wealth, Beauty, goodness and auspiciousness in this world, ALL of these result from You. It is Your (Lakshmi)
sambhandam that makes them qualified in the above manner.

Some of them become auspicious by SAAKSHAAT Lakshmi Vachaka Sabdham and the others by Lakshmi
VISISHTA Vaachaka Sabdham.

KurEsa refers in this verse to two types of auspiciousness through association with SRISABDHAM. One is “SrIriti abhedhena praTaam asnuthE”. By the very attachment of the Sabdham “SRI”, they attain auspiciousness.

Thiru Pathi, Thiru Mangai, Thiru MaaLikai, Thiru ViLakku, Sri KurEsa are examples of the Sakshaath Sabdham. Visishta Vaachaka Sabdhams are illustrated by Srimad Bhagavatam, Srimad Ramaayanam, et al.
#Sristhavam

ஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ரங்கநாச்சியார் திருவடிகளே சரணம்


 ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 8 
தேவி தவந்மஹிமாதிர்ந ஹரிணா
நாபி த்வயா ஜ்ஞாயதேயத்யப்யேவமதாபி நைவ யுவயோ:
ஸர்வஜ்ஞதா ஹீயதே |
யந்நாஸ்த்யேவ ததஜ்ஞதாமநுகுணாம்
ஸர்வஜ்ஞதாயா விது:வ்யோமாம்போஜமிதந்தயா கில விதந்
ப்ராந்தோயமித்யுச்யதே ||பொருள்
“ஹே ஸ்ரீரங்க நாச்சியாரே! உம்முடைய மேன்மையின் எல்லையானது ஸ்ரீ ரங்கநாதனாலும் அறியப்படுவதில்லை.
உன்னாலும் உன்னுடைய மேன்மை என்பது எத்தன்மையது என்று அறியப்படுவதில்லை.
இப்படி இருந்தாலும் நீங்கள் இருவரும் அனைத்தையும் அறியும் தன்மையில் எந்தவிதமான குறையும் இல்லாமல் உள்ளீர்கள்.

இதன் காரணம் – எந்த ஒரு பொருளானது இல்லவே இல்லை என்பதை உணர்ந்து, அதனை அறிந்து
கொள்ள முயலாமல் இருப்பதையே அனைத்தும் அறிந்த தன்மையாக சான்றோர்கள் அறிகிறார்கள்.
‘ஆகாயத் தாமரை’, ‘முயல்கொம்பு’ ஆகியவற்றை உள்ளதாக அறிபவன் ‘பைத்தியக்காரன்’ என்றே உலகத்தினரால் கூறப்படுகிறான்” என்று பாடுகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான்! #ஸ்ரீஸ்தவம்



 Sri Sthavam Slokam – 8 
Devi thvanmahimAvathi: na HariNA nApi thvayA jn~AyathE
yadhyapyEvam aTApi naiva yuvayO: Sarvaj~nathA heeyathE |
yannAsthyEva tadhaj~nathAmanuguNaam sarvaj~nathAyA vidhu:
vyOmaAmbhOjam idhantayA kila vidhan bhrAnthOayamithyuchyathE || Meaning 
“Devi! Even Your Lord does not comprehend fully the limits of your KalyaaNa GuNaas. For that matter, You Yourself do not know the full extent of Your own auspicious qualities. This lack of awareness does not in any way cause harm to Your title as SARVAJNAI or as the one, who understands every aspect of knowledge.The reason for my view is as follows: Some think that one is a Sarvajnan, when one possesses knowledge about nonexisting things (e.g.) horn of a hare, Lotus growing in the sky, mirage in the desert. One, who prides themselves about knowledge of those non-real things would be at the head of a group of deluded ones.
In Your case, however the limit to Your Mahima is an unreal thing (i.e.), there is no such limit. It is understandable therefore that You do not know about an unreal, non-existing thing. Hence, there is no dispute on Your Sarvajnatvam. Your “unawareness (Ajnanam)” is Yataartha Jnanaparaaya Ajnanam and is not a Sarvatvabanjaka Ajnanam.”The essence of this verse is that Maha Lakshmi’s auspicious qualities do not have any limit!#Sristhavam

ஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ ரங்கநாயகி தாயார் திருவடிகளே சரணம்!


 ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 9 
லோகே வநஸ்பதி ப்ருஹஸ்பதி தாரதம்யம்
யஸ்யா: ப்ரஸாத பரிணாமம் உதாஹரந்தி
ஸா பாரதீ பகவதீ து யதீயதாஸி
தாம் தேவ தேவ மஹிஷீம் ச்ரியம் ஆச்ரயாம:

பொருள்
“இந்த உலகில் ஒருவன் ‘மரம்’ போன்ற ஜடப்பொருளாகப் பிறப்பதும் தேவகுருவான ‘ப்ருஹஸ்பதி’ போன்ற அறிவாளியாகப் பிறப்பதும் ஆகிய ஏற்றதாழ்வுகளை ஸரஸ்வதியினுடைய கடாக்ஷத்தின் பலனாகவே கூறுகின்றனர். பூஜிக்கத்தகுந்த அந்த ஸரஸ்வதி எந்த ஸ்ரீரங்க நாச்சியாரின் அடியாராக இருக்கிறாளோ, அனைத்து தேவர்களின் அதிபதியான ஸ்ரீரங்கநாதனின் அந்த ஸ்ரீரங்கநாச்சியாரை நாம் சரண் அடைவோமாக” என்று பாடுகிறார் ஸ்வாமி கூரத்தாழ்வான். #ஸ்ரீஸ்தவம்


 Sri Sthavam Slokam – 9 
LOkE vanaspathy Bruhaspathy tAratamyam
yasyA: prasAdha-pariNAmam udhAharanthy |

Saa Bharathee Bhagavathee thu yadheeyadhAsee
thAmm dEva-dEva Mahisheem Sriyam aasrayAma: ||

 Meaning 
“taam devadeva mahishIm Sriyam aasrayaama:”, asserts the poet in the SaraNAgati signature of the ninth and tenth slOkaas.

In the ninth verse, KurEsa states that those, who offer SaraNAgati at the lotus feet of Maha Lakshmi will be blessed as great ‘Scholar’ or with ‘Vak Samrutti’. KurEsa explains that by pointing out that the Goddess of Learning, Saraswati is a Kinkari Of Maha Lakshmi. Therefore, She will bless the Prapannas of Her Mistress with her own blessings.#Sristhavam

ஸ்வாமி கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்!
ஸ்ரீரங்க நாச்சியார் திருவடிகளே சரணம் !


 ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 10 & 11  (கடைசி 2 ஸ்லோகங்கள்)

ஸ்ரீஸ்தவம் ஸ்லோகம் 10 
யஸ்யா: கடாக்ஷ ம்ருது வீக்ஷண தீக்ஷணேந
ஸத்ய: ஸமுல்லசித பல்லவம் உல்லலாஸ
விச்வம் விபர்யய ஸமுத்த விபர்யயம் ப்ராக்
தாம் தேவ தேவ மஹிஷீம் ச்ரியம் ஆச்ரயாம:

 பொருள் 
“பிரளய காலத்தில் ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் கிட்டாத காரணத்தினால் இந்த உலகம் துவண்டு கிடந்தது. அப்போது இவளது கடைக்கண் பார்வை என்னும் ஸங்கல்பம் காரணமாக, அந்த ஸங்கல்பம் உண்டான க்ஷண நேரத்திலேயே பூமியானது தழைத்து விளங்கியது. மாதவன் வங்க கடல் கடைய அமுதினில் பிறந்தவள். தேவர்களின் தலைவனான ஸ்ரீரங்கநாதனின் பட்ட மஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியாரை நாம் சரண் அடைகிறோம்”

ஸ்ரீஸ்தவம் ஸ்லோகம் 11 
யஸ்யா: கடாக்ஷ விக்ஷா க்ஷண லக்ஷம் லக்ஷிதா: மஹேசா: ஸ்யு:
ஸ்ரீரங்கராஜ மஹிஷீ ஸா மாம் அபி வீக்ஷதாம் லக்ஷ்மீ:

 பொருள் 
“எந்த ஒரு பிராட்டியின் கடைக்கண் பார்வைக்கு ஒரு நொடிப்பொழுது இலக்கானாலும் மிகுந்த கைங்கர்யச் செல்வம் பெற்றவர்கள் ஆவார்களோ அப்படிப்பட்ட, ஸ்ரீரங்கராஜனின் பட்டமஹிஷியான ஸ்ரீரங்கநாச்சியார் என்னையும் தனது கடைக்கண் கொண்டு பார்க்கவேண்டும்” என்று மற்ற செல்வங்களை வேண்டாது கைங்கர்ய செல்வத்தையே ஸ்வாமி கூரத்தாழ்வான் வேண்டுகிறார்.

——- ஸ்ரீ ஸ்தவம் ஸம்பூர்ணம்  ———

Sri Sthavam by Swamy Koorathazhwan (Last 2 slokams)

#SriSthavam Slokam – 10 
YasyA: kaDAksha mrudhu-veekshaNa dheekshaNEna
sadhya: Samullasitha pallavam ullalaasa |
viswam viparyaya samuttha viparyayam prAk
thAmm dEvadEva mahisheem Sriyam AasrayAma: || (10)

Meaning:
“taam devadeva mahishIm Sriyam aasrayaama:”, asserts the poet in the SaraNAgati signature of the tenth slOka. Here, KurEsa refers to a happening at the time of the Universal Deluge (Pralayam). At that time, there is no Lakshmi Kataksham on this world. Hence, all chetanas and achetanas are anemic and famished and are in a state resembling death. When Maha Lakshmi took pity on the state of the Universe and thought about casting Her glance at the suffering Universe, that very thought of Her gave new life to the chetanas and achetanas. They became invigorated with energy and strength. Life came back all over. KurEsa sought refuge at Her holy feet, which is the embodiment of Compassion.

 #SriSthavam Slokam – 11 
YasyA: KaDAksha veekshA-kshaNa-laksham lakshithA mahEsA: syu: |
SrirangarAja Mahishee Saa mAmapi veekshathAm Lakshmee: || (11)

Meaning:
KurEsa concludes the Sri Sthavam by describing the power of that merciful glance of RanganAyaki. He begs Her to enrich him by casting Her glance on him.

In this verse, he reveals that even a second’s rest of Her glance on one will result in the acquisition of riches of the kind that have no comparison.

That Aiswaryam blessed by RanganAyaki is not the ordinary wealth that disappears with time. It is the eternal bliss of Moksham and residence in Sri Vaikuntam as a Muktha Jeevan in the company of Dhivya Dampathis and the Nitya Sooris.

The noble and altruistic poet, Sri KurEsa finally prays for the wealth of Kainkarya-Sampath from Sri Devi in this Sthavam.

———End of SriSthavam Slokams———
———————————————————–

ஸ்ரீரங்கநாயகி தாயார் திருவடிகளே சரணம்

 ஸ்வாமி கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம் 


Leave a Reply to krishna Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

11 thoughts on “ஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது

  • N. Mythili

    மிகவும் நன்றாக உள்ளது.அர்த்ததுடன் அருமையாக உள்ளது.JAI SRI RAM 🙏🙏🙏

    • krishna Post author

      தன்யோஸ்மி! ஸ்ரீ கூரத்தாழ்வானின் க்ருபை. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி அடிக்கடி உபந்யாஸத்தில் ஸ்ரீஸ்தவம், ஸ்ரீ சதுச்லோகி, ஸ்ரீஸ்துதி மற்றும் ஸ்ரீஸூக்தம் ஆகிய ஸ்தோத்திரங்கள் மிக முக்கியமானவை என்று ஸாதிப்பார். அடியேன் தாஸன்.

    • Murali Srirangachari

      Danyosmi Swamin, Excellent contribution,Angela Koti Pranams to you and your team for this dedicated services……

      • krishna Post author

        Dhanyosmi swamy for encouraging words. This srivaishnava website is owned and managed by Adiyen since I am a Techie and has some knowledge in Srivaishnava Sambrathyam and Azhwar pasurams.
        Adiyen added new posts regarding Emperumanin Kalyana Gunangal in Andal pasurams. Kindly read when you devareer get time.
        https://mylittlekrishna.com/emperuman-kalyana-gunangal/
        Adiyen Ramanuja Dasan.

  • முரளிதரன்

    சனாதன தர்மம் தழைக்க இது போன்ற கைங்கர்யம் மிகவும் தேவை. வாழ்த்துக்கள்.

  • A.SESHAGIRI

    உங்களின் அருமையான விளக்கத்தால் இந்த அரிய ஸ்லோகங்களின் அர்த்தங்களை அறியும் பாக்கியத்தை இன்று பெற்றேன்!. கடந்த சில நாட்களாக வெறுமனே ஸ்லோகங்களை மட்டும் சேவித்த பொருளள்ளாதா என்னை பொருளாக்கினதற்கு நன்றி !
    🙏🙏🙏

    • krishna Post author

      தன்யோஸ்மி சேஷாத்ரி அண்ணா.
      அடியேன் R.கண்ணன் இராமானுஜ தாஸன்.

    • krishna Post author

      Thank you for the encouraging words. This will motivate us to create more such slokam post along with meanings. It is good to recite Sristhavam on Fridays or Uthiram star or Hastham star.