“கலந்து மணியிமைக்கும் கண்ணா!
நின்மேனி மலர்ந்து
மரகதமே காட்டும்
நலந்திகழ் கொந்தின்வாய் வண்டறையும்
தண்துழாய்க் கோமானை
அந்திவான் காட்டும் அது”
ஸ்ரீ பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி – 87
பொருள்
“கண்ணா! நின்மேனியை மரதகமே மலர்ந்துகாட்டும், கலந்து மணியிமைக்குத் தண்டுழாய்க் கோமானான உன்னை அந்திவான் காட்டும் என்று யோஜித்து, பச்சைமாமலைபோல் மேனியானது மரதகப் பச்சைபோல் விளங்காநின்றது, அதற்குமேல் திருவாபரண ரத்நப்ரபையும் திருத்துழாய் அணிந்த அழகை உற்று நோக்குங்கால் அந்திவான் போன்றிருக்கின்றது”
Pasuram Meaning: The evening sky, O Lord!, -brings to mind your dark frame lit by the red koustabha gem on your chest. The bee-humming Tulasi garland on your chest makes your frame glow like a green emerald of excellence.