கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!
வேகமாய் வாராய், திருமுகம் தாராய்!
கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்!
காலிலே கிண் கிணிகள்! கையில் மணிக் கங்கணங்கள்!
நீல வண்ணக் கண்ணா, நடனம் நீ ஆடி வாராய்!
கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!
இடுப்பிலே ஒட்டியானம், விரல்களில் மோதிரங்கள்
கழுத்திலே தவழ்ந்திடும் வைஜயந்தி வனமாலை!
கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!
காசிப் பீதாம்பரமும் கையில் புல்லாங் குழலும்
பூசிய சந்தனம் உன், மேனி எங்கும் மணக்க
கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!
வாயினில் வையத்தைத் தாயிற்கே காட்டியவா
உலகத்தின் காவலா, நம் ஸ்ரீ கிருஷ்ணா,
நீ வேகமாய், வாராய்!
(உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா வாமன நம்பி திருக்கோலத்தில் )
Udupi Sri Krishna