1 துருவன் கதை ஸ்வாயம்புவ மனு வம்சத்தில் வந்த உத்தான பாதர் என்ற அரசர் பாரத தேசத்தை ஆட்சி செய்து வந்தார். மகாராஜா உத்தானபாதனுக்கு சுரூசி, சுநீதி என்று இரண்டு மனைவிகள். சுரூசியின் பிள்ளை உத்தமன், சுநீதியின் பிள்ளை துருவன். உத்தானபாதனுக்கு சுரூசியினிடம் மட்டும் பிரியம். லிங்க புராணத்தில் சுநீதியையும் துருவனையும் காட்டிற்கே விரட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது. சிம்மாசனத்தில் உத்தானபாதன் உட்கார்ந்துகொண்டிருந்தபோது உத்தமன் அவன் மடியில் உட்கார்ந்திருந்தான். துருவனும் அப்பாவின் மடியில் உட்காரலாம் என்று வந்தபோது சுரூசி ‘என்னிடத்தில் பிறக்காத உனக்கு இந்த இடம் தேவைதானா’ என்று […]
