ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 11
குழந்தை கிருஷ்ணன் நந்தகோபன் திருமாளிகையில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறான்;
அன்னையும் தாதியரும் சிறிது அசட்டையாக இருந்த நேரம். பளபளக்கும் கண்ணாடி போன்ற தரை; ஆங்காங்கே ரத்தினக் கற்கள் வைத்து இழைக்கப்பட்டது.
தவழும் குட்டனின் முகமானது தாமரை மலர் போலப் பளபளக்கும் தரையில் பிரதிபலிக்கின்றது. குழந்தை அதைப் பார்த்துக் களிப்பெய்துகின்றான்.
‘இதோ ஒரு தாமரை! அதன் நான் பிடிக்கிறேன்,’ என முயலுகிறான். முடியவில்லை. திரும்பத் திரும்பக் குட்டிக் கைகளால் தரையில் அடித்து, அசைத்துப் பார்த்தும் அத்தாமரையைத் தொடவே முடியவில்லை!
கோபமும் வருத்தமும் மிகக் குழந்தை இப்போது தாதியினுடைய முகத்தை நோக்கி, உதடுகள் நெளிய அழுகின்றானாம்!
லீலா சுகரின் அருமையான கற்பனையில் விளைந்த இனிமையான அனுபவம் இது! இப்படி தவழ்கின்ற கண்ணன் நம்மை காத்தருவானாக!
Note about Author Shri Leelasukar:
‘Sree Krishna Karnamrutham‘ is a work in Sanskrit by the poet Shri Bilvamangala Swami. There are 328 slokaas in this masterwork. He acquired the name ‘Leelasukar’ because of his becoming immersed in the Leela of Krishna!

