அந்த புல்லாங்குழலின் பாக்கியம் எனக்குக் கிட்டுமா?


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 10

ஸ்ரீகிருஷ்ணனின் மனத்தை மயக்கும் இனிய குழலிசையைக் கேட்டு வாயுபகவான் கூட மயங்கி தன் சலனத்தை நிறுத்தினாராம். பசுக்கள் மேய்வதை நிறுத்திவிட்டு அந்த அற்புதமான வேணுகானத்தில் மயங்கி நின்றனவாம். கோபிகைகளின் நிலையோ சொல்லுந்தரமன்று! அவர்களும் அப்படியே நின்ற இடத்திலேயே உறைந்து விட்டார்களாம்! லீலாசுகரும் அந்த இனிமையான வேணுகானத்தில் ஆழ்ந்து மயங்கி இருப்பினும், ஸ்ரீகிருஷ்ணரின் கொவ்வைச் செவ்வாயுடன் தொடர்பு கொள்ளும் எவ்வளவு அதிர்ஷ்டம் கொண்டது இந்த புல்லாங்குழல்!

” யமுனை நதிக்கரையில் வளரும் நளினமான மூங்கிலாகப் பிறக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமா? பகவானின் அதரங்களை ஸ்பர்சிக்கும் உயர்ந்த நிலையை அடைந்த அந்தக்குழலின் பாக்கியம் எனக்குக் கிட்டுமா? “

“ஓ புல்லாங்குழலே! பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் தாமரை போன்ற வதனத்தின் வாயிலிருந்து வரும் இனிய சுகந்தமான காற்றை அனுபவித்துச் சுவைக்கும் பேறும், அதனால் அவருடைய அழகிய அதரங்களினருகே இருக்கும் அற்புதமான பாக்கியமும் பெற்றுள்ள உன்னிடம் என் இரங்கத்தக்க நிலையை நந்தகுமாரனின் திருச்செவியில் ரகசியமாகச் சொல் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.” என்கிறார் லீலா சுகர்.

Note about Author Shri Leelasukar:

‘Sree Krishna Karnamrutham‘ is a work in Sanskrit by the poet Shri Bilvamangala Swami. There are 328 slokaas in this masterwork. He acquired the name ‘Leelasukar’ because of his becoming immersed in the Leela of Krishna!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *