அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்
“மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்
அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்
முத்த மிருந்தவா காணீரே முகிழ்நகை யீர்வந்து காணீரே “
விளக்கம்:
அத்தத்தின் பத்தாநாள் – ஹஸ்த நக்ஷத்திரத்திற்குப் பத்தாவது நாள் (கீழ்முறையில் எண்ணிப்பார்த்தால்) ரோஹிணீ நக்ஷத்ரமும், (மேல்முறையில் எண்ணிப் பார்த்தால்) திருவோண நக்ஷத்திரமுமாம். இவற்றுள் ரோஹிணீ நக்ஷத்திரம் ஸ்ரீக்ருஷ்ணாவதார நக்ஷத்ரம் : திருவோண நக்ஷத்ரம் – தானான தன்மையிலுள்ள திருமாலுக்கு உரிய நக்ஷ்த்ரம்.