அணியன்!
ஆயர்புத்திரன்!
இருடீகேசன்
ஈரைம்பதின்மரைக் காய்ந்த நிமலன்
உள்ளம் கவர்ந்தவன்!
ஊழிமுதல்வன்
எழில் திருமார்வன்
ஏழுலகும் உண்டவன்
ஐவர் தூதன்
ஒளிமணிவண்ணன்
ஓங்கி உலகளந்தவன்
ஔதார்யன்
அ முதல் ஔ வரை ..
உண்ணும் சோறு
பருகு நீர்
தின்னும் வெற்றிலை
எல்லாம் கண்ணன்!
வெண்ணெயுண்ட வாயன்!
