தீராத விளையாட்டுப் பிள்ளை


கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை!

தின்னப் பழங்கொண்டு தருவான், பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்!

என்னப்பன் என்னையன் என்றால்-அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்!

கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை!


புல்லாங் குழல்கொண்டு வருவான்! – அமுது

பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;

கள்ளால் மயங்குவது போலே – அதைக்

கண்மூடி வாய்திறந்தே கேட் டிருப்போம்!

தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்

தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை!


கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை!

அழகுள்ள மலர்கொண்டு வந்தே,

என்னைஅழஅழச் செய்துபின்

“கண்ணை மூடிக்கொள்;

குழலிலே சூட்டுவேன்” என்பான்!

என்னைக் குருடாக்கி

மலரினைத் தோழிக்கு வைப்பான்!

கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *