ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமாநுஜாய நம:
ஸ்ரீமதே இராமாநுஜாய நம:
சது:ஶ்லோகீ – பிராட்டியின் பெருமைகளை சொல்லும் நான்கு ஸ்லோகங்களை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார்.
தனியன்
ஸ்வாத யன்நிஹ ஸர்வேஷாம்
த்ரய்யந்தார்தம் ஸுதுர்க் ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர:
தம் வந்தே யாமுநாஹ்வயம்
த்ரய்யந்தார்தம் ஸுதுர்க் ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர:
தம் வந்தே யாமுநாஹ்வயம்
யத் பதாம்போருஹத்யாநவித்வஸ்தாசேஷ கல்மஷ:
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம்
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம்
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம
சது:ஶ்லோகீ – ஸ்லோகம் 1
“காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம்
வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண:
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்“
பொருள்:
ஹே பகவதி! மஹாலக்ஷ்மி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்! உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த நாராயணன்; ஸர்ப்பங்களில் சிறந்த ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்; வேத ஸ்வரூபியான கருடாழ்வான் வாஹனம்; உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை; தேவர்கள் குழு உனக்கு கைங்கர்யம் செய்பவர்கள்; உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக்கொண்டு முன் நிற்பது. இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது, புகழ்வது?

ஸ்ரீ பெருந்தேவி தாயார் திருவடிகளே சரணம்
சது:ஶ்லோகீ – ஸ்லோகம் 2
“யஸ்யாஸ்தே மஹிமானமாத்மான இவ த்வத் வல்லபோபி ப்ரபு:
நாலம் மாதும் இயத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத:
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்யாம்யஹம் நிர்பயோ
லோகைகேச்வரி லோகநாத தயிதே தாந்தே! தயாம் தே விதந்“
பொருள்:
“எந்த உன்னுடைய இயற்கையாகவே உனக்கு நித்யாநுகூலமாகவும் எல்லையில்லாததுமான விபவத்தைத் தனக்குப்போல் உன் அன்புக்குரியவனான ஈஸ்வரனும் இவ்வளவு என்று அளவிடுவதற்குத் திறமையற்றவனாகிறானோ அப்படிப்பட்ட உன்னை, ‘அடியேன் தாஸன்’ என்றும் ‘சரணாகதன்’ என்றும் சொல்லி நான் கொஞ்சமேனும் பயமற்றவனாகத் துதிக்கிறேன். உலகத்துக்கு ஒரே நாயகியாகவும் ஒரே நாதனான நாராயணனின் மார்பில் உறைபவளே! பொறுமையுள்ளவளே! உன் தயையை அறிந்து நான் இப்படிக் கூறுகிறேன்”

ஸ்ரீ ரங்க நாயகி தாயார் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்த சது ஸ்லோகீ – 3வது ஸ்லோகம்
சது:ஶ்லோகீ -ஸ்லோகம் 3
“ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண
ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம்
ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன:
காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத்
வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“
பொருள்:
“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது. அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பலவகையாகத் தோற்றமளிக்கிறது. ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத் தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை ஒருபோதும் எதிர் பார்க்கப் படுவதில்லையன்றோ”

வானமாமலை ஸ்ரீவரமங்கை தாயார் திருவடிகளே சரணம்
சது:ஶ்லோகீ – ஸ்லோகம் 4
“சாந்தானந்த மஹாவிபூதி பரமம் யத்ப்ரஹ்ம ரூபம் ஹரே:
மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம்
யாந்யந்யானி யதாஸுகம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாநி
ஆஹுஸ்வைரநுரூபரூபவிபவைர் காடோப கூடாநி தே“
பொருள்:
“பகவானுடைய எல்லா வகையான உருவங்களிலும் உன் சம்பந்தம் உண்டென்பது இதில் பேசப்படுகிறது. அமைதியோடு முடிவில்லாத மகாவிபூதி என்னும் பரமபதத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்குத் திருமேனியாக உள்ள எந்த உருவமோ அதைவிட மிகவும் பிரியமான உருவம் எதுவோ, எது ஆச்சர்யமானதோ சுகத்துக்கேற்றவாறு அவ்வப்போது எடுக்கப்பட்ட லீலையாக எடுக்கின்ற வேறு பல உருவங்களோ அந்த எல்லா உருவங்களும் தனது தகுந்த உருவங்களுடன் பெருமையுடனும் அழுந்தி ஆலிங்கனம் செய்யப்பட்டவையே. இதனால் பகவானுடைய எல்லா நிலைகளிலும் பிராட்டியின் சேர்த்தி சொல்லப்பட்டது.”
ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் திருவடிகளே சரணம்
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருவடிகளே சரணம்.
இறுதியில் அநுஸந்திக்கப்படும் ச்லோகம்:
ஆகாரத்ரய ஸம்பன்னாம் அரவிந்த நிவாஸிநீம் |
அசேஷ ஜகதீசித்ரீம் வந்தே வரத வல்லபாம் ||
ஆகாரத்ரய ஸம்பன்னாம் அரவிந்த நிவாஸிநீம் |
அசேஷ ஜகதீசித்ரீம் வந்தே வரத வல்லபாம் ||
பொருள்::
சேஷத்வ பாரதந்த்ர்ய போக்யதைகளில் அவனையன்றி அறியாதமை என்று சொல்லக்கூடிய முப்பெருமை பெற்றவளும், தாமரையில் வசிப்பவளும், எல்லா உலகையும் நியமித்து நடத்துமவளுமான வரதனுடைய அன்புக்குரியவளை வணங்குகிறேன்.
சேஷத்வ பாரதந்த்ர்ய போக்யதைகளில் அவனையன்றி அறியாதமை என்று சொல்லக்கூடிய முப்பெருமை பெற்றவளும், தாமரையில் வசிப்பவளும், எல்லா உலகையும் நியமித்து நடத்துமவளுமான வரதனுடைய அன்புக்குரியவளை வணங்குகிறேன்.
சது:ஶ்லோகீ- ஸ்லோகம் கேட்க.. (Chathu Sloki Slokam reciting by Shri K.Sudarshan alias Kavin – Duration 2 minutes )
ஆக இந்த நான்கு ஸ்லோகங்களால் லக்ஷ்மி விசிஷ்டமான வஸ்துவே உபேயமாகக் கடவது என்பதை அருளிச் செய்கிறார் ஆளவந்தார்.

—————- சது:ஶ்லோகீ ஸம்பூர்ணம் —————
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்!
அற்புதம்… ஸ்ரீ ரங்கநாயகி தாய் ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளே சரணம் 🙏🙏
Thanks a lot, u r the frst அடியார் who uploaded this sadhurslogi. Sri ஆளவந்தார் திருவடிகள்ளே சரணம்
Thank you 🙏🏼 🙏🏼 🙏🏼
Dhanyosmi. Acharyan krupai.
Thank you
Dhanyosmi. It is good to recite Chatusloki on Fridays and on Uthiram star. It is a coincidence that tomorrow is Friday as well as Uthiram star, both on the same day. Adiyen Dasan.