1 ஸ்ரீமதே இராமாநுஜாய நம: பெரிய பெருமாள் வாழித்திருநாமம் திருநக்ஷத்ரம்: ரேவதி (சித்திரை மாதம்) திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியேசெய்யவிடைத் தாய்மகளார் சேவிப்போன் வாழியேஇருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர்கோன் வாழியே இடர்கடியப் பாற்கடலை எய்தினான் வாழியேஅரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே அந்தரியாமித்துமும் ஆயினான் வாழியேபெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே பெரியபெருமாள் எங்கள் பிரானடிகள் வாழியே பெரிய பிராட்டியார் வாழித்திருநாமம் திருநக்ஷத்ரம்: உத்திரம் (பங்குனி மாதம்) பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியேபங்குனியில் உத்திரநாள் பார்உதித்தாள் வாழியேமங்கையர்கள் திலதமென வந்தசெல்வி வாழியேமாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் […]
