ஸ்ரீமன் நாராயணன் அடியார்க்கு அடியாராக இருப்பவர்களை ரட்சித்து அருள்பவன்


ஸ்ரீமன் நாராயணன், அடியார்க்கு அடியாராக இருப்பவர்களை ரட்சித்து அருள்பவன்:

‘நம் ஆழ்வார்’ என இறைவனாலே பெயரிடப்பட்ட நம்மாழ்வார் பக்தியில் மூர்ச்சையாகி , மூர்ச்சையாகி , பின் பல நாட்கள் சுய நினைவின்றி மீண்டு மீண்டும், அந்த பரந்தாமனைப்பற்றி பாடல்கள் எழுதுவாராம். ஆழ்வாரின் பக்தி சிறப்பானது!!

நம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர் மதுரகவியாழ்வார் , இவர் திருக்கோளூரில் பிறந்தவர் , வட நாட்டிலிருந்து , ஒரு கேள்விகுடைந்தெடுக்க பதில் தேடி ஒர் ஒளிக்காட்டிய வழியில் பயணித்து , நம்மாழ்வாரை சரணடைந்தவர். !
மற்ற ஆழ்வார்கள் திருமாலை பணிந்து பாடல்கள் இயற்ற , இவர் தம் குரு, நம்மாழ்வாரின் பாதம் பணிந்து , அடியார்க்கு அடியாராக “கண்ணி நுண் சிறுத்தாம்பு ” என்று தம் குருவின் பெருமையை 11 பாடல்களில் வெளிப்படுத்தியவர் !

“திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரிய கோலத் திருவுருக்காண்பன் நான்
பெரியவண் குருகூர் நகர் நம்பிக்கு
ஆளுரியனாய் அடியேன் பெற்ற நன்மையே!”

– கண்ணி நுண் சிறுத்தாம்பு பாசுரம்

பொருள்:
திரிகை என்பதற்கு மீண்டு வருதல் என்று பொருள். அப்படி அவர் சுவாமி நம்மாழ்வாரிடம் இருந்து மீண்டு வந்தாலும் அவருடைய சம்பந்தத்தால் மதுரகவிகளுக்கு கிடைக்கக் கூடிய இடமோ நித்ய சூரிகள் வசிக்கும் இடமான திருப்பரமபதம் ஆகும். எம்பெருமானை அடைந்த பின் திரும்பி வருவது என்பது கிடையாது. அத்தகைய பலன் ஆழ்வாருடைய திருவடியால் சரண் புகுந்ததால் இவருக்குக் கிடைத்தது. எம்பெருமானின் திவ்ய மங்கள திருமேனியின் அழகையும் சேவிக்கக் கிடைத்தது.

ஒரு சமயம் திருக்கச்சி நம்பிகள், காஞ்சி வரதராஜப் பெருமாளிடம், ஆளவட்ட கைங்கர்யம் செய்து வரும் வேளையில் , ”எப்போது எமக்கு வைகுண்டப்பிராப்தி கிட்டும்?” என்று கேட்க, அதற்கு பெருமாள் “நீர் பாகவத அடியார்களுக்கு கைங்கரியம் செய்தால், என் மனம் உவகை கொள்ளும். அதற்கு பின்னர் உமக்கு வீடுபேறு நிச்சயமாக கிடைக்கும்” என்றாராம்!

இறைவன் தம்மிடம் பக்தி செலுத்துபவர்களை விடவும் , தம் பக்தர்களின் பால் அன்பு கொண்டு , அவர்களுக்கு சேவை செய்து வரும் பக்தர்களின் பக்தர்களை மிகவும் நேசிக்கிறானாம்.

************************************************

Unlike other AzhwArs, madhurakavi AzhwAr was fully situated in nammAzhwAr. So, he was always happy and said “dhEvumaRRaRiyEn”, “nAvinAL naviRRu inbam eythinEn”, etc.

Let us view 3rd pAsuram of kaNNinun chiruththAmbu.

thirithaNthAgilum dhEvapirAnudaik
kariya kOlath thiruvurukkAnNban NAn
periyavanN kurugUr Nagar Nambikku
ALuriyanAy adiyEn peRRa NanmaiyE !

Simple translation:
“I roam but everywhere I see my Lord’s dark charming face. Even taking my eyes off nammAzhwAr, I will enjoy the blackish beautiful thirumEni of the swAmy of nithyThrough service to the king of Kurugur, this lowly-self has found his grace.asUris. I got this great benediction (of seeing emperumAn) because of my subservience to kurugUr nambi (nammAzhwAr).”

EmperumAn Nararayanan is willingly showing his beautiful thirumEni to madhurakavi AzhwAr since he is a disciple of nammAzhwAr.

nammalwar-MadurakaviAlwar

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *