4 வாரணமாயிரம் சூழவலஞ்செய்து * நாரண நம்பி நடக்கின்றானென்றுஎதிர் * பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் * தோரணம் நாட்ட கனாக்கண்டேன் தோழீ! நான். 1 நாளை வதுவை மணமென்று நாளிட்டு * பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ் * கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர் * காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான். 2 இந்திரனுள்ளிட்ட தேவர்குழாம்எல்லாம் * வந்திருந்துஎன்னை மகட்பேசி மந்திரித்து * மந்திரக் கோடியுடுத்தி மணமாலை * அந்தரிசூட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான். 3 நால்திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி * […]
