திருப்பாவை பாசுரம் 15 – எல்லே! இளங்கிளியே!


🐘 திருப்பாவை பாசுரம் 15 – எல்லே! இளங்கிளியே! 🌄

“எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா!”

🎵 பாசுரம் 🎵

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!

சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்;

வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்;

வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!

ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை?

எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்;

வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க

வல்லானை மாயனைப் பாடு — ஏலோர் எம்பாவாய்.

📖 பாசுர விளக்கம் 📖

சென்ற பாடல் வரை ஆண்டாள் கோபியரை எழுப்பிக்கொண்டிருந்தாள். முதல் முறையாக இப்பாடலில் துயிலில் இருந்து விழித்துக்கொண்ட அப்பெண்ணிடம் ஆண்டாள் உரையாடுவதைக் கேட்போம்.

[ஆண்டாள்] இளங்கிளி போன்றவளே என்னே இன்னமா தூங்குகிறாய் ?

[தோழி] பெண்களே ! இதோ வருகிறேன் ! ‘சில்’ என்று கூச்சலிட்டு எழுப்பாதீர்கள் !

[ஆண்டாள்] நீ வாயாடி. நீ சொல்லும் கட்டுக்கதைகள் முன்னமே நாங்கள் அறிவோமே !

[தோழி] நீங்கள்தான் வாயாடிகள்;பரவாயில்லை; நானே தான் வாயாடியாக இருத்துவிட்டு போகிறேன்

[ஆண்டாள்] நீ உடனே புறப்பட்டு வா! வேறு என்ன வேலை இருக்கிறது ?

[தோழி] எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா ?

[ஆண்டாள்] எல்லோரும் வந்து விட்டார்கள். நீயே வந்து பெண்களின் எண்ணிக்கையைப் பார்.

குவலயாபீட யானையையும் கம்சன் முதலிய பகைவர்களையும் அழித்த கண்ணனின் புகழ் பாட எழுந்துவா 🐘

🌄 Thiruppavai Pasuram 15

This verse is in the form of a conversation between the maidens at the threshold of a house the maiden within the house.

Andal: “What is this, Pretty-like damsel! Are you still sleeping ?”

Gopi: “Do not use harsh words!, I am coming”

Andal: “You can talk well; we know it already”

Gopi: ” As it is, you are all strong; doesn’t matter, let me be the one(harsh in speech)”

Andal: “Come quickly and join us”

Gopi: “Has everyone come?”

Andal: “Yes, everyone has come, count for yourself”

“Let us all sing in praise of the Krishna who killed the Kuvalayapida elephant and Kamsa. 🐘

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *