திருப்பாவை பாசுரம் 29 – சிற்றஞ்சிறு காலே
“கிருஷ்ணா! உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு மற்ற பொருள்கள் மீது பற்று ஏற்படாமல் காப்பாயாக!”
பாசுரம் 29
சிற்றஞ்சிறு காலே வந்து உன்னை சேவித்து,
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து
நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா;
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்று — ஏலோர் எம்பாவாய்.
பொருள்
மிக அதிகாலையில் வந்து உன்னை சேவித்து தாமரை போன்ற
உன் திருவடிகளைப் துதிக்கும் காரணத்தைக் கேட்டுக் கொள்!
பசுக்களை மேய்த்து, ஜீவனம் செய்யும் ஆயர்குலத்தில் பிறந்த நீ
எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் செல்வது கூடாது.
நாங்கள் விரும்பியவற்றைப் பெற்றவுடன், உன்னை விட்டு அகல நாங்கள் இங்கு வரவில்லை.
ஏழேழு ஜன்மத்துக்கும் உன்னுடன் சேர்ந்தவர்களாகவே இருப்போம்.
உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம்;
மற்ற எங்கள் ஆசைகளை அகற்றி அருளவேண்டும்.

Thiruppavai Pasuram 29 – Meaning
Govinda! In the wee hours of morning we have come to worship you
and praise your golden lotus-feet;
Pray hear our purpose. You were born in the cow-herd clan, now
you cannot refuse to accept our service to you.
Know that these goods are not what we came for.
Through seven lives and forever we would like to close to you and serve you alone. And if our desires be different, you must change them.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.