திருப்பாவை பாசுரம் 7 – கீசு கீசு என்று


திருப்பாவை பாசுரம் 7 – கீசு கீசு என்று

பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ?

பாசுரம் To READ
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற — ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவை பாசுரம் 7 – கீசு கீசு என்று – LISTEN


விளக்கவுரை
கீசு கீசு என எங்கும் வலியன் பறவைகள் ஒன்று கூடி
கூவிய கூச்சல் ஒலி கேட்க வில்லையா பேதைப் பெண்ணே!
காசுமாலையும், குண்டுமாலையும் கலகலவென்று ஒலிக்க
வாசனையுடைய கூந்தலை உடைய இடைப்பெண்கள்
கைகளை அசைத்து மத்தினால் கடையும் தயிரின் ஓசை கேட்கவில்லையோ!
பெண்கள் தலைவியே! நாராயணனான கண்ணனை நாங்கள் பாட
கேட்டுக்கொண்டே படுத்துக் கிடக்கிறாயோ?
பிரகாசமானவளே ! கதவைத் திறப்பாயாக!

Thiruppavai – Pasuram 7 Meaning
Hey Foolish Girl! Do you not hear the grey-birds(seven-sisters) screeching in chorus ?

Do you not hear the butter pail of fragrant-haired
milkmaids, their bangles and charms jingling merrily as they churn ?

O noble born girl, do you still lie in bed listening
while we stand and sing in praise of Narayana, Kesava ?
Bright girl! Open the door quickly!

SriAndal-8

கோதை பிராட்டியார் திருவடிகளே சரணம்!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *