சந்திரவளியிடம் வெட்கப்படும் கிருஷ்ணன்!


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 9

ராதா பிருந்தாவனத்தின் ராணி என போற்றப்படுபவள். அவளுடைய நெருக்கமான தோழிகள் லலிதா மற்றும் விசாகா. இன்னொரு பக்கம் பார்த்தால் ‘சந்திரவளி’ என்னும் கோபிகை, அவள் ராதாவின் தங்கை. கிருஷ்ணனை மிகவும் நேசிப்பவள். சந்திரவளி ஸ்ரீமதி ராதாராணியுடன் போட்டியிடுபவள். அவளுக்கும் பல கோபிகை தோழிகள் உள்ளனர்.

ஒரு சமயம் ராதாவைக் காண கிருஷ்ணன் வந்தான். ராதாவின்அழகான வீட்டை விட்டு வெளியே வரும் சந்திரவளியைப் பார்த்து (அவளை ராதா என்று எண்ணி) கிருஷ்ணன் கேட்டான்.

“ஏய் ராதா, எப்படி இருக்கிறாய்? “

அந்த வார்த்தைகளைக் கேட்டு சந்திரவளி “ஏய் கம்ஸா! நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டாள்.

இவளுக்கு என்ன புத்தி பேதலித்து விட்டதோ! என்று எண்ணிய கிருஷ்ணன் , “கம்ஸனை நீ எங்கே பார்த்தாய்?” என்று வினவினான்.

அவள் பதிலுக்கு, ” நீ ராதாவை பார்த்த இதே இடத்தில் தான்” என்றாள் கோபத்துடன்.

கிருஷ்ணன் அதைக் கேட்டு விவரம் புரிந்ததும் வெட்கப்பட்டு தலையை குனிந்து புன்னகை செய்து வழிந்தான்.

இப்படி வெட்கப்படும் கிருஷ்ணன் நம்மை காப்பானாக!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *