ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 8
கிருஷ்ணனிடம் கோபியர்கள்,
” கிருஷ்ணா, உன் பார்வை கருணையைப் பொழிகின்றன.
உன்னுடைய நடை, கம்பீரமாக அழகாக மற்றும் கவர்ச்சிகரமான உள்ளது. உனது பேச்சைக் கேட்பவர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்குவர்.
உன்னுடைய புன்னகை மூன்று உலகங்களையும் கொள்ளை கொள்ளும்
நான் மூன்று உலகங்களில் மிக்க அழகு நிறைந்தவனைப் பார்க்க விரும்புகிறேன்.
உன்னுடைய முகம் ஒரு புன்னகையுடன், அனைத்திற்கும் அப்பாற்பட்டது. உன்னுடைய திருமேனியின் நீல நிறம் உலகில் அனைத்து இடங்களிலும் பரவியிருக்கிறது.
குழலூதி மதுர காண இசையைப் பொழிந்து கொண்டே நோக்கும் உன்னுடைய கடைக்கண் பார்வையால் என்னை ரக்ஷிப்பாயாக!
கிருஷ்ணா, நீ என்னை மகிழ்ச்சியடையச் செய்தால், எனக்கு வேறு எந்த ஒரு தேவையும் இல்லை. நீ எனக்கு மகிழ்ச்சி அளிக்க வில்லை என்றால், மற்றவர்கள் என்னிடம் மகிழ்ச்சியடைந்து ஒரு பயனும் இல்லையே!.”
இவ்வாறு கோபிகைகளை பேரானந்தம் அடையச் செய்த கிருஷ்ணன் நம்மை காப்பானாக!