ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 7
யாசோதா கண்ணனிடம், “கிருஷ்ணா, இங்கே வா”
கிருஷ்ணன்: “இதோ வந்தேன். என்ன அம்மா?”
யாசோதா: “அந்த தங்க கோப்பையிலிருக்கும் பாலை பருகிவிடு”
கிருஷ்ணன்: ” நான் அப்புறம் பருகுவேன்”
யாசோதா: “பலராமன் யமுனாயாற்று மணற்குன்றுகளில் விளையாட சென்றுள்ளான்.இப்போதே பருகிவிடு”
கிருஷ்ணன்: “ஏன் தாயே?”
யாசோதா: “இப்போதே பருகினால்தான் உன் குடுமி முடி விரைவாக வளரும்”
கிருஷ்ணன்: “ஓ அப்படியா? உடனேயே பருகுகிறேன்”
கிருஷ்ணன் பாதி பாலை அருந்தி விட்டு, தன் குடுமி முடியைத் தொட்டு பார்த்து, மகிழ்ச்சியில், “அம்மா! என் குடுமி வளர்ந்து விட்டது, பாரேன்!”
இவ்வாறு மகிழ்ச்சியடைந்த கிருஷ்ணன் நம்மை காப்பானாக!
Krishna Karnamrutham – 7
Yasoda: “hey Krishna, come here”
Krishnan: “Yes, mother”
Yasoda: ” Please drink the milk kept in the golden cup”
Krishna: “No, I will drink it later”
Yasoda: ” “Please drink now. Balarama is playing in the sand dunes of Yamuna now”
Krishna:”Why now?”
Yasoda:”So that your hair will grow fast”
Krishna:”Oh is it? I will drink now”
After drinking half the cup of milk , Krishna touched his hair to see whether it has grown, And became happy and let this happiness save us.
Krishna Karnamrutham – slokam 2-60
Kalindee pulinodhareshu musali yavath gatha khelithum,
Thavath karbhooritham paa , piba hare vardhishyathe they shikhaa,
Itham bala thaya prathaarana param sruthwa yasodhaa giraa,
Payanna swashikhaam sprusan pramudhitha ksheeredhapeethe hari

