ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 6
— கிருஷ்ணனுக்கும் கோபிக்கும் நடந்த சம்பாஷணை —
கோபி: “யாருடைய விரல்கள் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டுகின்றன?”
கிருஷ்ணன்: “ஏ பெண்ணே! நான்தான் மாதவன்”.
கோபி: என்ன? நீ மாதவன் என்றால் வசந்த ருதுவா?
கிருஷ்ணன்: இல்லை. நான் சக்ரதாரி;
கோபி: ஓஹோ! அப்படியானல் நீ குயவன் போலுள்ளவன்.
கிருஷ்ணன்: இல்லை அம்மா! நான் இவ்வுலகைத் தாங்குபவன்.
கோபி: ஓஹோ! உலகைத் தாங்கும் ஆதிசேஷனோ?
கிருஷ்ணன்: இல்லை, இல்லை, நான்தான் கொடிய நாகப்பாம்பை அடக்கியவன்;
கோபி: அப்படியானால் நீ கருடனாக இருக்கவேண்டும்.
கிருஷ்ணன்: இல்லையே! நான்தான் ஹரி.
கோபி: ஹரியா? குரங்குகளின் தலைவனா?
ஸ்ரீ கிருஷ்ணனையே இவ்வாறு கேலிசெய்யும் கோபிகை எப்படிப்பட்டவளாக இருக்க வேண்டும்!?
இவ்வாறு கோப-கன்னிகையிடம் சம்பாஷணையில் தோற்கடிக்கப் பட்ட கிருஷ்ணன் நம்மை காப்பானாக!
கிருஷ்ண_கர்ணாம்ருதம் ஸ்லோகம் 3-105
“அங்குல்யா க: கவாடம் ப்ரஹரதி
குடிலே, மாதவ: கிம் வஸந்தோ
நோ சக்ரீ, கிம் குலாலோ, ந ஹி
தரணிதர:, கிம் த்விஜிஹ்வ: பணீந்த்ர: |
நாஹம் தாராஹிமர்த்தீ, கிமஸி
ககபதிர்-நோ ஹரி: கிம் கபீந்த்ர
இத்யேவம் கோபகன்யா-ப்ரதிவசன
ஜித: பாது வச்சக்ரபாணி: ” | |
Krishna_Karnamrutham – Slokam 3-105
“Angulyaa, ka kavadam praharathi, kutile .Madava kim vasantho,
No chakri, Kim kulalo , na hi dharani dhara, kim dwijihwa, Phaneendra, |
Naham darahimardhim kimasi , khagapathir no, hari kim kapeendra,
Ithyevam gopa kanya prathivachana jitha pathu vas chakra pani. || “
—Conversation between Krishna and Gopika goes like this–
Gopi: Who knocked my door?
Krishna: Hey girl, it is Madhava,
Gopi: Is it the spring?
Krishna: No, it is the holder of wheel,
Gopi: Is he a potter with a wheel?
Krishna: No, no, I am the one, who holds the mother earth,
Gopi: Is he the snake with two tongues?
Krishna: No, I am the one, who defeated the snake in the river,
Gopi: Is he the king of birds, the Garuda?
Krishna: No, I am Hari.
Gopi: Are you then..? Oh you are indeed a monkey!
Thus Krishna was defeated in dialogue by the gopika, and let Him save us.
This is in the form of teasing conversation between a gopika and Lord Krishna. Madhava also indicates spring, Dharanidhara can be Adhi sesha the snake and hari also indicates a monkey!
‘Sree Krishna Karnamrutham‘ is a work in Sanskrit by the poet Shri Bilvamangala Swami. There are 328 slokaas in this masterwork. He acquired the name ‘Leelasukar’ because of his becoming immersed in the Leela of Krishna! One of the features of this “Sri Krishna Karnamrutham by Sri Leelasukar” is that the slokams are composed in dialogue format, that makes it more interesting!


