ஸ்வாமி நம்மாழவார் அருளிய திருவாய்மொழி பாசுரம்
குரைகழல்கள் நீட்டி* மண் கொண்ட கோல வாமனா,*
குரை கழல் கைகூப்புவார்கள்* கூட நின்ற மாயனே,*
விரை கொள் பூவும் நீரும்கொண்டு* ஏத்தமாட்டேனேலும்,*
உன் உரை கொள் சோதித் திரு உருவம்* என்னது ஆவி மேலதே!
ஸ்வாமி நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி – 4 ஆம் பத்து பாசுரம். 4.3.7
பொருள்: வீரக்கழல் ஒலிக்கப்பெற்ற திருவடிகளைப் பரப்பி ஜகத்தை அளந்து கொண்ட வடிவழகிய வாமன மூர்த்தியே! அத்திருவடிகளைக் குறித்து ஓர் அஞ்ஜலிபண்ணுமவர்கள் தன்னையே வந்து அடையும் படி நின்ற ஆச்சரிய பூதனே! பரிமளம் கொண்ட பூக்களையும் பாத்யம் முதலியவற்றுக்கான தீர்த்தத்தையும் ஏந்திக்கொண்டு உன்னைத் துதிக்கவல்லேனல்லெனினும், வாய்கொண்டு சொல்ல வொண்ணாதபடி வாக்கை மீறியிருக்கின்ற சோதியையுடைய உன்னுடைய திருமேனியானது என்னுடைய ஸத்தையைப் பற்றியிரா நின்றதே! இது என்ன அற்புதம்!.

Pasuram meaning:
“O Lovely Manikin! You extended your tinkling feet and took the Earth. O Lord who gives refuge to those who come with folded hands! Though I do not worship you with fragrant flowers and water. Yet your mysterious radiance stands guard over my soul”
ஸ்வாமி நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!