சித்திரையில் ரோகிணி – ஸ்ரீ எங்கள்ஆழ்வான் திருநக்ஷத்ரம்.

திருவெள்ளறையில் விஷ்ணுசித்தர் என்ற திருநாமத்துடன் அவதரித்தவர்.
ஞானம், பக்தி, ஆசார்ய நிஷ்டை முதலியவை கூரத்தாழ்வானைப் போலவே இவரிடம் குடிகொண்டிருந்ததால் எம்பெருமானார் இவருக்கு “எங்களாழ்வான்” என்று திருநாமம் சூட்டியதாகச் சொல்வர்.
–-ஸ்ரீ எங்களாழ்வான் தனியன்–
” ஸ்ரீ விஷ்ணுசித்த பதபங்கஜ ஸங்கமாய
சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண |
நோசேந் மமாபி யதிசேகர பாரதீநாம்
பாவ:கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ” | |
–— வாழித்திருநாமம் —
சீராரும் வெள்ளறையில் சிறந்துதித்தோன் வாழியே
சித்திரையில் உரோகிணிநாள் சிறக்கவந்தோன் வாழியே
பார்புகழும் எதிராசன் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பரவுமவன் வாழியே
திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவருளோன் வாழியே
தீதிலா பாடியத்தைத் தேர்ந்துரைப்போன் வாழியே
தாரணியில் விண்டு மதம் தழைக்க வந்தோன் வாழியே
தண்ணளியோன் எங்களாழ்வான் தாளிணைகள் வாழியே
–— மங்கள ஸ்லோகம் —
“ரக்தாப்ஜபத்ர நேத்ராய ச்வேதாசல நிவாஸிநே
ஸ்ரீ விஷ்ணுசித்த நிதயேர் நித்யஸ்ரீர் நித்ய மங்களம் “
ஸ்ரீ எங்களாழ்வான் திருவடிகளே சரணம்!