ஸ்ரீ கோதா சதுச்லோகீ


ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமாநுஜாய நம:

🌹 ஸ்ரீ கோதா சதுச்லோகீ 🌹 – சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ கோதை நாச்சியாரின் பெருமைகளைச் சொல்லும் நான்கு ஸ்லோகங்கள் – ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச்செய்தது.

தனியன்

“சக்ரே கோதா சதுச்லோகீம் யோ வேதார்த்த பிரகர்ப்பிதம்

ஸ்ரீ வேங்கடேச சத்பக்தம் தம் நந்தகுரும் பஜே”️

பொருள்: வேதப்பொருள்களைத் தன்னுள் கொண்ட கோதா சதுச்லோகீ ஸ்தோத்ரத்தை அருளிச்செய்தவரும், திருவேங்கடமுடையானின் பரமபக்தருமான அனந்தாழ்வானை வணங்குகிறேன்.
Sri Ananthaazhwan
ஸ்ரீ அனந்தாழ்வான்

🎵 ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 1🎵

நித்யா பூஷா நிகம சிரஸாம் நிஸ் ஸமோத்துங்க வார்த்தா

காந்தோ யஸ்யா: கசவிலுலிதை: காமுகோ மால்ய ரத்னை: |

ஸூக்த்யா யஸ்யா சுருதி ஸுபகயா ஸுப்ரபாதா தரித்ரீ

ஸைஷா தேவீ ஸகல ஜனனீ சிஞ்சதாம் மாமபாங்கை: ” ||

📖 விளக்கம் : வேதம் ஒதுபவனுடைய நலனைப் பேணும் இனிய சுபமான ஸ்ரீ ஸூக்திகளை – திருப்பாவை ஜீயர் உகந்து நித்யம் அனுசந்திக்கும் ஸ்ரீ ஸூக்திகளை – அஜ்ஞ்ஞான இருளைப் போக்கும் ஸ்ரீ ஸூக்திகளை அருளியவள் ஸ்ரீ ஆண்டாள். இவை உபநிஷத் துக்களுக்கு நித்ய பூஷணம். ஈடு இணையற்ற வேதங்களுக்கும் மங்களம் கொடுக்கும் இந்த ஸ்ரீ ஸூக்திகளை கேட்டு இவ்வுலகத்தார் சுப்ரபாதமாக கேட்டு துயில் துறந்து விழித்து எழுகிறார்கள். ஆண்டாள் குழல்களில் சூடிக் களைந்ததால் பூச்சரங்கள் கண்ணனை பிச்சேற்ற வல்லவை, கோதை சூடி களைந்ததால் ரத்னா ஹாரமாக கொள்கிறான். ‘கோதா’ என்றால் ‘மாலை’. ஆண்டாளே மாலை, அதாவது ‘மாலை’ மாலை கட்டினாள். ‘திருமாலை’ கட்டினாள், – தன் வார்த்தையால். கட்டி நமக்கு ஆக்கி கொடுத்தாள், திருப்பாவையாக! இத்தகு அகில ஜகன் மாதாவுடைய குளிர்ந்த கடாக்ஷத்தால் பிறக்கும் அமுத வெள்ளத்தில் நனைந்து சகல தாபங்களும் போகப் பெற்றவனாக வேணும்!

Sri Andal Rangamannar
ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் – ஸ்ரீவில்லிபுத்தூர்

🌸 ஸ்ரீ அனந்தாழ்வானைப் பற்றிய குறிப்பு 🌸

ஸ்ரீ இராமாநுஜாசாரியரின் முதன்மையான சிஷ்யர்களில் ஒருவர் திருமலை அனந்தாழ்வான்! அக்காலத்தில், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருமலைக் கோயிலும், சுற்றுப்புறமும் மிகவும் பாழ்பட்டுக் கிடந்ததைக் கண்ட ராமானுஜர், தனது சீடர்களை அழைத்து, “திருமலைக் கோவிலையும், சுற்றுப்புறத்தையும் சீர்படுத்தி பராமரிக்கும் பொறுப்பை எவர் ஏற்க விரும்புகிறீர்” வினாவெழுப்பினார். பலரும் வாய் மூடி இருந்தபோது, அனந்தாழ்வான், தான் திருமலை சென்று உபயம் செய்ய ஒப்புக் கொண்டார். உடனே அவரை ஆரத்தழுவிய இராமானுஜர், “அனந்தாழ்வானே!, நீயே ஆண்பிள்ளை!” என்று கூறவே. அன்றிலிருந்து, அவர் ‘திருமலை அனந்தாண்பிள்ளை’ என்றும் போற்றப்பட்டார்.

ஸ்ரீ அனந்தாழ்வான் திருவடிகளே சரணம்!

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!


ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 2

மாதா சேத் துலஸீ பிதா யதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்

ப்ராதா சேத் யதிசேகர: ப்ரியதம ஸ்ரீ ரெங்க தாமாயதி |

ஜ்ஞாதா ரஸ் தனயா: த்வதுக்தி ஸரஸஸ் தந்யேந: ஸம்வர்த்திதா:

கோதா தேவி! கதம் த்வ மந்ய ஸுலபா ஸாதாரணா ஸ்ரீரஸி” ||

விளக்கம் : “கேசவ பிரியையான துளசி தேவி மாதா நந்தவனத்தில் ஆழ்வார் திரு மகளாராய் – வேயர் பயந்த விளக்காய் ஸ்ரீ விஷ்ணு சித்த குலத்தில் அவதரித்தீர்! நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் என்ற உம்முடைய ஆசையை நிறை வேற்றி வைத்தாரன்றோ எதிராசர்!”

“பிரிய தமன் அதாவது பிரியமானவன், அரங்கத்து அரவின் அணை அம்மான், ஸ்ரீ ரெங்க நாதன் மூடு பல்லக்கில் எழுந்து அருள, கேசவ நம்பியை கைப்பிடித்தாயே. பிரிய தமன் உன் புக்ககத்திலே குடி புகுந்தார்,” (பெரியாழ்வாருடைய அகம் தான் இன்று ஆண்டாள் சந்நிதி. பிறந்ததும் புகுந்ததும் ஒரே இடம்! ) “ஆண்டாளே உம்முடைய வாய் சொல் அமுதத்தை – வேதம் அனைத்தைக்கும் வித்தான திருப்பாவையை, இந்த அமுத வெள்ளத்தை பருகி அத்தாலே வளர்ந்த ஜ்ஞானவான்கள் இருக்க, ‘போய பிழை புகுதருவான்’ என்று சொல்லி மற்றவர்க்கும் கிட்டி உய்யும்படி எளிதான, சாதாரணமான புகலாய் இருக்கிறீர்! “

(ஸ்லோக விளக்கம் வேளுக்குடி உ.வே ஸ்ரீ வரதாச்சாரியார் ஸ்வாமி உரையிலிருந்து..)

Sri Andal
ஸ்ரீ ஆண்டாள் – ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 3

கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜனஹிதம்

த்ருஷ்ட்வைவ ஸர்வாத்மநாம்

ப்ரோக்தம் ஸ்வஸ்ய ச கீர்த்தனம் ப்ரபதனம்

ஸ்வஸ்மை ப்ரஸூநார்பணம் |

ஸர்வேஷாம் ப்ரகடம் விதாது மநிசம்

ஸ்ரீதன்விநவ்யே புரே

ஜாதாம் வைதிக விஷ்ணுசித்த தனயாம்

கோதாம் உதாராம் ஸ்தும: ||

📖 விளக்கம்: ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில் பாரை உண்டு – பார் உமிழ்ந்து – பார் இடந்த எம்பெருமான், ஸ்ரீ வராஹ மூர்த்தியாய், மானமிலா பன்றியாய் பூமி பிராட்டியை ரக்ஷித்து கொடுத்தான்! அப்போது காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு சுலபமான, எல்லோரும் செய்யும்படியான உபாயத்தை அருளிச் செய்ய வேண்டும் என்று ஜகன் மாதாவான பூமி பிராட்டி பகவானிடம் நமக்காகப் பிரார்த்திக்கிறாள். இதையே ‘கல்பாதௌ ஹரிணா ஸ்வயம் ஜநஹிதம்’ என்று அனந்தாழ்வான் சதுஸ்லோகியில் அழகாக உறுதிப்படுத்துகிறார்.

அப்போது எம்பெருமான் 3 இலகு உபாயங்களை சொல்கிறார்.

  1. கீர்த்தனம்‘ – பகவானின் திருநாமத்தை வாய்விட்டு உச்சரிக்க வேண்டும்.
  2. தஸ்மை ப்ரசுரார்ப்பணம்‘ என்று அவன் திருவடியில் புஷ்பங்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும்.
  3. ‘ப்ரபதன’ சுலபன் அவன் – ஆச்ரயிப்பவர்களுக்கு சுலபனாக இருப்பதால், அவனது திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

இம்மூன்றும் எளிதாக செய்யக்கூடியது. இதை எப்போதும் செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீ வராஹ மூர்த்தி. பூமி பிராட்டியை ரட்ஷித்து இடது பக்கம் அமர்த்தி கொண்டு -அவரே திருக்கையால் நாம் முதலில் பூமா தேவியை பற்றி கொண்டு அவனை பற்ற வேண்டும் என்று காட்டி கொடுக்கிறார். ஆண்டாள் அவதாரத்துக்கு மூலமான அவதாரம் வராஹ அவதாரம். ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிவனத்தில் பெரியாழ்வாரின் திருமகளாய் ஆண்டாள் அவதரித்தாள்.

ஸ்ரீ வராஹ மூர்த்தி அருளிய 3 உபாயங்களை, ஸ்ரீ ஆண்டாள்,

  1. தூமலர் தூவித்தொழுது 🌹🙏
  2. வாயினால் பாடி ️🎵
  3. மனத்தினால் சிந்திக்க 👣

என மூன்று யுகம் தாண்டி நமக்கு புரியும் படி அருளினாள். “உதாராம் கோதாம்” – பாட வல்ல நாச்சியார் ஆக திருஅவதரித்து பாட்டின் பெருமையை நமக்கு அருளினாள்!

  • திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்கள் ‘ எம்பெருமான் திருநாமங்களை பாடு’ என வலியுறுத்திச்சொல்லியும்;
  • 2-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்’ என்றும்;
  • 3-வது பத்து பாசுரங்கள் ‘அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்’ என்றும் சொல்லி வராஹ மூர்த்தியிடம் கேட்ட மூன்று விஷயங்களை மூன்று, பத்து பாசுரங்களில் பாடினாள் ஆண்டாள்.

“மாயனை வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்” என்று பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய ஔதார்யத்தை ஆச்ரயித்து நாம் கோதாவின் ஸ்ரீஸூக்திகளை, திருப்பாவையை ஸேவிப்போம். பாடி தொழுது வணங்குவோம்! (ஸ்லோக விளக்கம் வேளுக்குடி உ.வே ஸ்ரீ வரதாச்சாரியார் ஸ்வாமி உரையிலிருந்து..)

Thiruppavai upayangal
திருப்பாவை – 3 உபாயங்கள்

ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 4 ((கடைசி ஸ்லோகம்)

ஆகூதஸ்ய பரிஷ்க்ரியா மனுமபாம் ஆஸேசனம் சக்ஷுஷோ:

ஆனந்தஸ்ய பரம்பராம் அனுகுணாம் ஆராம சைலேசிது: |

தத்தோர் மத்ய கிரீட கோடி கடித ஸ்வோச்சிஷ்ட கஸ்தூரிகா

மால்யா மோத ஸமேதி தாத்ம விபவாம் கோதாம் உதாராம் ஸ்தும: ||

விளக்கம்:

கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய பகவானுக்கு இஷ்டத்தைச் செய்து நிரதிசய ப்ரீதியை விளைவிப்பவள் ஸ்ரீ ஆண்டாள். தனது அழகு அலங்காரங்களால் கண்களுக்கு ஆனந்தத்தை விளைவிப்பவள். திருமங்கை தங்கிய சீர் மார்வன் தாம் விரும்பி, நாள் தோறும் ஆண்டாள் சூடிக்கொடுத்த பூ மாலையிலே திருமுடியிலே தரித்து ஆனந்த பிரவாஹத்தில் மூழ்கி, இவ்வாறு பகவானை பிச்சேற்றி மகிழச் செய்யும் பெருமையுடைய ஸ்ரீ கோதா பிராட்டியை நாம் ஸ்துதி செய்து வணங்குவோமாக!

ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் – ஸ்ரீவில்லிபுத்தூர்

☘ ஸ்ரீ கோதா சதுச்லோகி – ஸ்ரீ ஆண்டாள் மங்கள ஸ்லோகங்கள் ☘

🌸 ஸ்வோச்சிஷ்ட மாலிகா பந்த கந்த பந்துர ஜிஷ்ணவே |

விஷ்ணு சித்த தனூஜாயை கோதாயை நித்ய மங்களம் || (1)

🌸 மாத்ருசா கிஞ்சன த்ராண பத்த கங்கண பாணயே |

விஷ்ணு சித்த தனூஜாயை கோதாயை நித்ய மங்களம் || (2)

🌸 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே |

நந்த நந்தன ஸுந்தர்யை கோதாயை நித்ய மங்களம் || (3)

🌸 கர்கடே பூர்வ பல்குன்யாம் துளஸீகான நோத்பவாம் |

பாண்ட்யே விஸ்வம்பராம் கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் || (4)

இந்த நான்கு மங்கள ஸ்லோகங்களில் கீழ்க்கண்ட 3வது ஸ்லோகம் மிக சிறப்பானது. கோயில்களில் திரு ஆராதன மங்கள ஆரத்தியின் போது ஸேவிப்பர்.

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே

நந்த நந்தன ஸுந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!

ஸ்ரீ அனந்தாழ்வான் திருவடிகளே சரணம்!
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *