பெரியாழ்வார் திருமொழி பாசுரம் – நீராடல் – எண்ணெய்க் குடத்தை 2


கிருஷ்ணனை நீராட வருமாறு அழைத்து பெரியாழ்வார் அழகாக பாடுகிறார். கண்ணனின் குழந்தைப் பருவத்தை மிகுந்த ஆர்வத்துடன் அவர் பாடியுள்ளார்.

எண்ணெய்க் குடத்தை உருட்டி, இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி,

கண்ணைப் புரட்டி விழித்து, கழகண்டு செய்யும் பிரானே,

உண்ணக் கனிகள் தருவன், ஒலிகட லோதநீர் போலே,

வண்ணம் அழகிய நம்பீ, மஞ்சன மாடநீ வாராய்!

விளக்க உரை:
“எண்ணெய் நிறைந்த குடத்தை உருட்டிவிட்டு, உறங்குகிற சிறு குழந்தைகளை கையால் வெடுககெனக் கிள்ளி எழுப்பி, தூக்கம் விட்டு எழுந்திருக்கச் செய்து, கண் இமையை தலைகீழாக மாற்றி அப்பூச்சி காட்டி விழித்து பொறுக்க முடியாத குறும்புகளை செய்யும் கண்ண பிரானே!
நல்ல பழங்களை நீ உண்ணும்படி, உனக்குக் கொடுப்பேன். கோஷியாகின்ற கடல் அலைகளையுடைய நீர் போலே திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற உத்தமபுருஷனே! மஞ்சனம் ஆட நீ வாராய்!” என்று பெரியாழ்வார் பாடுகிறார்.

English Translation:
“O Lord of dark ocean-hue! Overturning the oil pitchers, pinching and waking up sleeping children, turning your eyelids inside out, such are the mischiefs you play. My Master, I will give you fruit to eat. Come, you must have your bath.”

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

Click Play to listen to this Pasuram

 

krishna-Neeradal


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

2 thoughts on “பெரியாழ்வார் திருமொழி பாசுரம் – நீராடல் – எண்ணெய்க் குடத்தை