Gopika Geetham


கிருஷ்ண பகவான் எங்கும் எதிலும் இருப்பவன் என்ற தத்துவத்தை முதலில் உணர்ந்தவர்கள், பகவான் மேல் எளிமையான பக்தி கொண்டிருந்த கோபிகைகளும், கோபாலர்களும் தான். எனவே தான் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் தெரிந்தான். பார்க்கும் பொருள் எல்லாவற்றிலும் இருப்பவன் அவனே என்ற தத்துவம். காணாமல் போன கோபாலர்களுக்காக அவர்கள் வடிவில் ஒவ்வொரு வீட்டிற்கும் கிருஷ்ணனே சென்றான்.

Krishna-Gopiyar2
இது, எல்லாம் அவன் வடிவமே என்ற அரும் பொருள். இந்த இரண்டும் அவர்களுக்கு அல்லவா கிடைத்தது. அதனால்தான் சுகபிரம்ம ரிஷி, பாகவதத்தில் வரும் கோபிகைகளின் கீதத்தினை மிகமிக உயர்ந்தது என்கிறார். அதை பரீட்ஷத் மகாராஜாவுக்கு உபதேசமும் செய்தார். மகரிஷிகளும், மகான்களும் போற்றியதும்; மகத்தான பலனைத் தரக்கூடியது கோபிகா கீதம்.

சுகபிரம்ம ரிஷி உபதேசித்த இந்த கோபிகா கீதத்தை நாம் அனைவரும் படித்து, கிருஷ்ண பகவானின் மனம் உவகை அடையச் செய்து அவருடைய அருள் பெறுவோம்!

Kindly play this audio and chant along with it. This Gopika Geetham is rendered by Haridas swamy. This song is like parayanam type, follows Muddadi-Pinnadi chanting (முன்னடி – பின்னடி)

Embed Music Files – Share Audio – GOPIKA GEETHAM
ஸ்ரீ கோபிகா கீதம் – ஸ்ரீமத் பாகவதம் 10வது ஸ்காந்தத்தில் கூறப்படுவது:

(ஸ்ரீமத் பாகவதம் 10.31.1 )

1. ஜயதிதே அதிகம் கிருஷ்ண ஜன்மனாவ்ரஜ:
ஸ்ரயத இந்திரா கிருஷ்ண ஸஸ்வதத்ர ஹி
தயித த்ருஸ்யதாம் கிருஷ்ண திக்ஷீதாவகா
த்வயித்ருதாஸவ: கிருஷ்ணத்வாம விசின்வதே

பொருள்: ஓ கிருஷ்ணா! தாங்கள் இங்கு பிறந்ததால் ஸ்ரீ மகாலட்சுமி எங்களுடைய இந்த இடைச்சேரியில் நித்யவாசம் செய்கிறாள். இந்த கோகுலம் வைகுண்டத்தைவிட அதிகமாக ஜொலிக்கிறது. உம்மிடம் உயிரை வைத்து நானா திசைகளிலும் தேடிக் கொண்டிருக்கும் எங்களைப் பார்க்க வேண்டும்.

2. சரதுதாஸயே கிருஷ்ண ஸாதுஜாதஸத்
ஸரஸிஜோதா க்ருஷ்ண ஸ்ரீமுஷா த்ருஸா:
ஸுரதநாத தே கிருஷ்ண அஸுல்க தாஸிகா
வரத நிக்நதோ க்ருஷ்ண கே ஹகிம்வத:

பொருள்: சம்போக பதியான ஸ்ரீகிருஷ்ணா, சரத்காலத்து ஓடையில் தாமரைப் பூக்கள் அழகாக மலர்ந்துள்ளன. அந்த மலரின் நடுவிலுள்ள ஸ்ரீயை (லட்சுமியை) நோக்குகிறாய். அதே கண்களினால் வேலைக்காரிகளான எங்களைக் கொல்வதானது வதமல்லவா கிருஷ்ணா?

3. விஷஜலாப்யயாத் கிருஷ்ணவ்யாள ராக்ஷஸாத
வர்ஷமாருதாத் க்ருஷ்ண வைத்யு தானலாத்
வ்ருஷமயாத் மஜாத் க்ருஷ்ண விஸ்வதோ பயாத்
ருஷப தே லயம் க்ருஷ்ண ரக்ஷிதா முஹு

பொருள்: சிரேஷ்டரான ஹே கிருஷ்ணா! காளிங்கன் என்ற கொடுமையான விஷப் பாம்பினால் மரணமடையாமல் எங்களைக் காத்தாய். மழை, காற்று, இடி ஆகியவற்றிலிருந்தும் காப்பாற்றினாய். அகாசுரன், அரிஷ்டாசுரன், மயன், வ்யோமாசுரன் ஆகியோரிடத்திலிருந்தும், எல்லாவிதமான பயத்திலிருந்தும் எங்களை அடிக்கடி காப்பாற்றிய நீ எங்களைக் கைவிட்டு விடாதே என்று பிரார்த்திக்கிறோம்.

4. நகலு கோபிகா க்ருஷ்ண நந்தனோ பவான்
அகில தேஹினாம் க்ருஷ்ண அந்தராத்மத்ருக்
விகள ஸார்த்திதோ க்ருஷ்ண விஸ்வகுப்தயே
ஸக உதேயிவான் க்ருஷ்ண ஸாத்வதாம் குலே

பொருள்: ஹே கிருஷ்ணா! நீர் இடைச்சாதியான யசோதையின் பிள்ளை அல்ல! (தேவரஹஸ்யம் சாதாரண பக்தைகளின் பரப்ரம்ம மனதுக்குத் தோன்றியிருக்கிறது.) எல்லா ஜீவன்களுக்கும் உள்ளிருக்கும் அந்தர்யாமி நீங்கள். பிரும்மாவினால் பிரார்த்திக்கப்பட்டு உலகைக் காத்து ரட்சிப்பதற்காக யதுகுலத்தில் வந்த ஏ தோழனே ! நீர் அவதரித்ததே எங்களுக்காகத்தான்.

5. விரசிதாபயம் க்ருஷ்ண வ்ருஷ்ணிதுர்ய தே
சரணமீயுஷாம் க்ருஷ்ண ஸம்ஸ்ருதேர் பயாத்
கரஸரோருஹம் க்ருஷ்ண காந்த காமதம்
ஸிரஸி தேஹி ந க்ருஷ்ண ஸ்ரீகரக்ரஹம்

பொருள்: ஹே கிருஷ்ணா, ஹே காந்தா! உமது கரங்கள் சாதாரணமானவையல்ல. உம்முடைய பாதத்தில் சம்சார பயத்தால் சரணமடைந்துவிட்டவர்களுக்கு அபயமளிப்பவை அவை. அவர்கள் கோரியதை வரமாக அளிப்பவையும் அவையே. ஸ்ரீமகாலட்சுமியின் கரங்களைப் பிடிப்பவையான அந்தத் தாமரை போன்ற கையை என்னுடைய சிரசில் வைக்க வேண்டும்.

6. வ்ரஜ ஜனார்திஹன் க்ருஷ்ண வீரயோஷிதாம்
நிஜஜனஸ்மய க்ருஷ்ண த்வம் ஸநஸ்மித
பஜஸகேபவத் க்ருஷ்ண கிங்கரி: ஸ்மநோ
ஜலருஹானனம் க்ருஷ்ண சாரு தர்சய

பொருள்: கோகுலவாசிகளின் அனைத்து மனக்கவலைகளையும் போக்கும் வீரனும் நீயே, தோழனும் நீயே! சொந்த ஜனங்களுக்குள் எவருக்கேனும் தங்களைப் பற்றி கொஞ்சம் கர்வம் தோன்றினால்கூட, உன் புன்முறுவலைக் கண்டால் அந்த கர்வம் அழிந்துவிடும். உமது வேலைக்காரிகளான எங்களிடம் நீ வரவேண்டும். பத்மம் போன்ற அழகிய முகத்தை பெண்களான எங்களுக்கே முதலில் காண்பிக்க வேண்டும். கிருஷ்ணரைத்தவிர மற்றவர்கள் யாவரும் பெண்களே என்பது கோபியர் எண்ணம். ஸ்ரீ கிருஷ்ணனே புருசோஷத்தமன்.

7. ப்ரணததேஹினாம் க்ருஷ்ண பாபகர்சனம்
த்ருணசாரனுகம் க்ருஷ்ண ஸ்ரீநிகேதனம்
பணிபணார்பிதம் க்ருஷ்ண தேபதாம்புஜம்
க்ருணுகுசேஷு ந: க்ருஷ்ண க்ருந்திஹ்ருச்சயம்

பொருள்: உன்னுடைய பாதங்கள் சாதாரணமானவையா என்ன? அதைப் பிடித்து நமஸ்காரம் செய்பவர் எந்த குலத்தவாரக இருந்தாலும் சரி, அவனை மன்னித்து ஏற்றுக் கொள்வாய். அது பசுக்களுடன் துணைபோகும் மகாலட்சுமியின் இருப்பிடம். காளீயனின் சிரசின் மேல் நின்றவை உங்கள் பாதங்கள் எங்கள் மனத்தை ஆக்ரமித்துக் கொள்ள வேண்டும்.

8. மதுரயா கிரா க்ருஷ்ண வல்குவாக்யயா
புதமனோக்ஞ்யா க்ருஷ்ண புஷ்கரேக்ஷண
விதிகரீரிமா: க்ருஷ்ண வீரமுஹ்யதீ :
அதரசீதுனா க்ருஷ்ண ப்யாயஸ்வந:

பொருள்: செந்தாமரைக்கண்ணா! ஹே வீரா! உம்முடைய இனிமையான வார்த்தைகள், அமுத மொழிகளினால் வித்வான்களே தங்கள் மனத்தை இழந்து உம்பால் ஈர்க்கப்படுகின்றனர். அதேபோல் உமது வார்த்தைகளினால் வேலைக்காரிகளான நாங்களும் தன் வயமிழந்து தவிக்கின்றோம். எங்களையும் திருப்தி செய்வீர்களா?

9. தவகதாம்ருதம் க்ருஷ்ண தப்தஜீவனம்
கவிபிரீடிதம் கிருஷ்ண கல்மஷாபஹம்
ஸ்ரவண மங்களம் கிருஷ்ண ஸ்ரீமதாததம்
புவிக்ருணந்தி தே க்ருஷ்ண பூரிதா ஜனா:

பொருள்: ஹே கிருஷ்ணா, உம்முடைய பிரிவால் நாங்கள் இறந்ருப்போம். ஆனால் மகான்கள் உன் கதாம்ருதத்தைக் கூறி எங்களைப் பிழைக்க வைத்துவிட்டார்கள். தாபத்ரயம் அடைந்தவர்களை உயிர்ப்பிப்பதும்; வியாசர், சுகர் போன்றவர்களால் கொண்டாடப்பட்டதும், ஆசையால் ஏற்படக்கூடிய அல்லல்களைப் போக்கடிக்கக்கூடியதும், கேட்பதாலேயே <உடனே மங்களத்தை அளிக்கக்கூடியதும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக்கூடியதுமான உமது கதையாகிய அமிர்தத்தை எவர் சொல்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ அவர்கள் பலப்பல பிறவிகளில் வெகுவாக தானங்கள் செய்திருக்க வேண்டும்.

10. ப்ரஹஸிதம் ப்ரிய க்ருஷ்ண ப்ரேம வீக்ஷணம்
விஹரணம் சதே க்ருஷ்ண த்யான மங்களம்
ரஹஸிஸம் விதோ க்ருஷ்ணயா ஹ்ருத்ஸ்ப்ருஙஹா
குஹக கோமள க்ருஷ்ண க்ஷஸயந்திஹா

பொருள்: ஹே கிருஷ்ணா! உம்முடைய புன்முறுவலையும் அன்பும் கருணையும் நிரம்பிய பார்வையையும் சிந்தித்தால் அது மங்களத்தைத் தரும். அந்த விளையாட்டையும், ரஹஸ்ய சமிக்ஞை நிறைந்த பார்வையையும் நினைப்பதாலேயே எங்கள் உள்ளத்தையெல்லாம் வற்றச் செய்து விடுகிறாயே!

11. சலஸியத் வ்ரஜாத் க்ருஷ்ண சாரயன் பசூன்
நளின சுந்தரம் க்ருஷ்ண நாத தே பதம்
சிலத்ருணாங்குரை: க்ருஷ்ண ஸுதத்திந:
கலிலதாம் மன: க்ருஷ்ண காந்த கச்ச தீ

பொருள்: ஹே நாதா! எப்பொழுது கோகுலத்திலிருந்து பசுக்களை ஓட்டிக் கொண்டு நீங்கள் புறப்படுகிறீர்களோ, அப்போதே தாமரை போன்ற தங்களது அழகிய பாதம் சிறுகற்களாலும் புற்களின் சிறுநுனிகளாலும் குத்தப்படுமேயென்று எங்கள் மனம் கலங்கத் தொடங்கிவிடுகிறது.

12. தினபரிக்ஷயே க்ருஷ்ண நீலகுந்தலை:
வனருஹானனம் க்ருஷ்ண பிப்ரதாவ்ருதம்
கனரஜஸ்வலம் க்ருஷ்ண தர்சயன்முஹீ
மனஸிந: ஸ்மரம் க்ருஷ்ண வீர யச்சஸி

பொருள்: மாலை வேலைகளில் கருத்த கேசத்தின் முன் நெற்றிக்குழல்கள் சூழ நீவிர் வரும்போது, உமது முகத்தில் பாலாடைக் கட்டிகளின் தூள்கள் மறைந்து மறைந்து காணப்படுகின்றன. (ஏற்கெனவே பால் போன்ற முகத்தில் பாலாடைக்கட்டிகளின் துகள்கள் ஒட்டிக் கொண்டிருப்பதால் முகம் மேலும் பிரகாசமடைகிறது. அதன் பின்னணியில் முன்நெற்றிக் கருங்குழல்கள் மேலும் ஒளியை உமிழ்கின்றன.) அந்த மிருதுவான தாமரை முகத்தை எங்களுக்கு அடிக்கடி காட்டுவதன் மூலம் எங்கள் உள்ளத்தில் கிளர்ச்சியைத் தூண்டுகிறீர்கள்.

13. ப்ரணத காமதம் க்ருஷ்ண பத்மஜார்ச்சிதம்
தரணி மண்டனம் க்ருஷ்ண த்யேயமாபத்
சரண பங்கஜம் கிருஷ்ண சந்த
ரமண ந: ஸ்தனேஷு க்ருஷ்ண அர்ப்பயாதீஹன்

பொருள்: மனோவியாதியைப் போக்கும் ரமணா! பிரம்மனால் பூஜிக்கப்பட்டதும், ஆபத்துக்காலத்தில் அவசியம் தியானம் செய்ய வேண்டியதும், நினைத்த மாத்திரத்திலேயே ஆபத்தைப் போக்கக்கூடியதும், கேட்டவுடன் கிடைக்க அருள்பாலிப்பதுமான உமது பாத சரணங்களை எங்கள் மார்பில் (நெஞ்சில்) வைக்க வேண்டும்.

14. ஸுரத வர்த்தனம் க்ருஷ்ண ஸோக நாசனம்
ஸ்வரித வேணுனா க்ருஷ்ண ஸுஷ்ட்டு சும்பிதம்
இதாராகவி க்ருஷ்ண ஸ்மரணம் ந்ருணாம்
விதாவீரந: க்ருஷ்ண தே அதராம்ருதம்

பொருள்: ஹே வீரா! காமத்தை விருத்தி செய்வதும், சோகத்தை அழிப்பதும், இசைக்கும் குழலால் நன்கு முத்தமிடப்படுவதும், மனிதர்களின் பிற ஆசைகளை அறவே செய்வதுமான உமது இதழ்ச் சுவையை அளித்திட வேண்டும்.

15. அடதி யத் பவான் க்ருஷ்ண அன்ஹி கானனம்
த்ருடிர்யுகாயதே க்ருஷ்ண த்வாம பஸ்யதாம்
குடிலகுந்தலம் க்ருஷ்ண ஸ்ரீமுகம் ச தே
ஜட உதீக்ஷதாம் க்ருஷ்ண பக்ஷ்மக்ருத் த்ருஸாம்

பொருள்: எப்பொழுது நீர் பிருந்தாவனம் குறித்துக் கிளம்புகிறீர்களோ, அப்பொழுதே உம்மைப் பார்க்காத பிராணிகளுக்கு அரை விநாடி கூட ஒரு யுகமாக நகர்கிறது. பிறகு மாலைவேளைகளில் கண்டபடி கலைக்கப்பட்ட நெற்றி மயிர்களுடன் கூடியிருக்கும் உமது திருமுகத்தைப் பார்க்கும்போது அதைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அப்போது உம்மைப் பார்க்கத் தடையாக இருக்கும் இமைகளைப் படைத்த பிரும்மனே ஒரு ஜடமாக உணர்ச்சியற்ற மரமாகத் தென்படுகிறார். (கண்ணைக் காக்கும் இமை கூட அநாவசியமாகிவிடுகிறது).

16. பதிஸுதான்வய க்ருஷ்ண ப்ராத்ரு பாந்தவான்
அதிவிலங்க்ய தே க்ருஷ்ண அந்த்யச்யுதா கதா
கதிவிதஸ்தவோத் க்ருஷ்ணகீத மோஹிதா:
கிதவ யோக்ஷித: க்ருஷ்ண கஸ்த்ய ஜேந்நிஸி

பொருள்: ஹே அச்சுதா! கணவன், குழந்தை, வம்சம், உடன்பிறப்புகள், உறவினர்கள் என்று அனைவரையும் மீறி, நற்கதி உன்னிடம்தான் கிடைக்குமென்று ஓடி வந்துவிட்டோம். உமது வேணுகானத்தால் வசீகரிக்கப்பட்டு மோகத்தால் வாடும் பெண்களை இரவில் எவன் கைவிடுவான்.

17. ரஹஸி ஸம்விதம் க்ருஷ்ண ஹ்ருச்சயோதயம்
ப்ரஹஸிதானனம் க்ருஷ்ண ப்ரேம வீக்ஷணம்
ப்ருஹது: ஸ்ரியோ க்ருஷ்ண வீக்ஷ்யதாம தே
முஹுரதிஸ்ப்ருஹா க்ருஷ்ண முஹ்யதே மன:

பொருள்: ஏகாந்தத்தில் உமது சங்கேத வார்த்தைகள் காமத்தைக் கிளரும். உமது முறுவல் பூத்த முகம், பிரியமான பார்வை, மகாலட்சுமிக்கு இருப்பிடமான உமது பரந்த மார்பு-இதையெல்லாம் நினைத்து நினைத்து எங்கள் மனமானது அதிக ஆசை கொண்டு அடிக்கடி மோகமடைகிறது.

18. வ்ரஜவநௌகஸாம் க்ருஷ்ண வ்யங்தி ரங்கதே
வ்ருஜினஹந்த்ரயவம் க்ருஷ்ண விஸ்வமங்களம்
த்யஜ மனாக்ச ந: கிருஷ்ண த்வத் ஸ்ப்ருஹாத்மனாம்
ஸ்வஜனஹ்ருத்ருஜாம் க்ருஷ்ண யந்நிஷீதனம்

​பொருள்: ஹே அங்கா, உன் உருவத்தைப் பார்த்த உடனேயே கோகுலத்தில் உள்ள பிராணிகளின் அனைத்து பாவங்களும் நசித்துப் போகின்றன. உலகுக்கே மங்களம் பெருக்கெடுக்கின்றன. எங்களுடைய ஹ்ருதய ரோகங்களுக்கு நிவிருத்தியைத் தருகின்றது எதுவோ, அதைக் கொஞ்சம் தருவீராக.

19. யத்தே ஸுஜாத சரணாம்புருஹம் ஸ்தனேஷு
பீதா சனை: ப்ரிய ததீமஹி கர்கசேஷு
தேனாடவீமடஸி தத்வ்யத்ததே ந கிம்ஸ்வித்
கூர்பாதிபிர் ப்ரமதி தீர்பவதாயுஷாம்

பொருள்: எங்கள் நெஞ்சில் உன்பாதம் பட்டால் நோகுமென்று நாங்கள் பயப்படுகிறோம். அத்தகைய கால்கள் காட்டில் சுற்றினால் சின்ன கற்களினால் அந்தச் சரணம் நோகாதோ என்று எங்கள் புத்தியே பேதலிக்கிறது.

உத்தர ஸ்லோகம்

20. இதிகோப்ய: ப்ரகாயந்த்ய ப்ரலபந்த்யஸ்ச சித்ரதா
ருருது ஸுஸ்வரம் ராஜன் க்ருஷ்ண தர்ஸன லாலஸா

பொருள்: ஓ ராஜன் என்று பரீட்சித்து மகாராஜனை அழைத்த சுக பிரும்மரிஷி மேலும் சொன்னார். இம்மாதிரி கோபாலனைக் காணவேண்டுமென்ற ஆவலுடன் உரத்த குரலில் விசித்திரமாக புலம்பி அழுதனர்.

21. தாஸாமவிர்பூச்சௌரி ஸ்மயமான முகாம்புஜ:
பீதாம்பரதா ச்ரக்வி ஸாக்ஷõன் மன்மத மன்மத:

பொருள்: மன்மதனே ஆசைப்படும் மாறனான கோபாலன் பீதாம்பரம் தரித்து, புஷ்ப மாலைகள் மார்பில் தவழ, அந்த கோபிகைகளின் முன் ஆவிர்பவித்தார்.

22. தம்விலோக்யாகதம் பிரேஷ்டம் ப்ரீத்யுத்புல்ல த்ரு ஸோ அபலா
உத்தஸ்த்துர்யுகபத் ஸர்வாஸ்தன்வ: ப்ராணமிவாகத்

பொருள்: அமர்ந்துகொண்டே கானம் செய்த கோபிகைளை ஆவிர்பவித்த அந்த கோபாலனைக் கண்டவுடன் மீள உயிர்பெற்றவர்கள் போல துள்ளி எழுந்தார்கள் கோபியர். அவர்களுக்கு யாதொரு பிணியும் வராது என்றும் சகல செல்வமும் சேரும் என்றும் அருளினார் ஆனந்த கிருஷ்ணன்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *