கண்ணன் பிறந்த இரவில் மோகனத் தாலாட்டு 1


கண்ணன் பிறந்த இரவில் மோகனத் தாலாட்டு:
எத்தனையோ தாலாட்டுகள் பாடினாலும், குட்டி கிருஷ்ணனின் தாலாட்டு மோகனத் தாலாட்டு அல்லவா?
கண்ணன் பிறந்த இரவு. இந்த இரவு மிகவும் கடினமான இரவு, குழந்தைக்கு!
சிறை விட்டு, ஆற்றைக் கடந்து, ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, இடி மின்னல், புயல் மழையில்…
பிறந்ததுமே பயணம் தொடங்கி விட்டது!
உலகத்தையே பயணிக்க வைக்கும் குழந்தை,
இன்று, தானே பயணிக்கிறது!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒர் இரவில், ஒருத்தி மகனாய் வளர..
விதிப்பவன் தனக்கே விதித்துக் கொண்டான்!!

இன்று கண்ணக் குழந்தைக்குத் தாலாட்டு பாடுபவர் பெரியாழ்வார்.
” சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரி வளையும் நாணும் அரைத் தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்
செங்கண் கருமுகிலே தாலேலோ
தேவகி சிங்கமே தாலேலோ”

– பெரியாழ்வார் திருமொழி

இந்தப் பாட்டை, ஸ்ரீரங்கத்தில் அரங்கனின் அரையர் மிக உருக்கமாகப் பாடுவாதுண்டு!

krishna-cartoon


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

One thought on “கண்ணன் பிறந்த இரவில் மோகனத் தாலாட்டு