“ஹே! லக்ஷ்மணா, எங்கே என்னுடைய வில்? ” என்று கேட்ட கிருஷ்ணன்!


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 1 – ஸ்ரீ லீலா சுகர் அருளியது

யசோதை குழந்தை கிருஷ்ணனைத் தொட்டிலில் இட்டுத் தூங்க வைக்க முயல்கிறாள்; எந்தக் குழந்தைக்குத் தான் கதை கேட்க ஆசை இருக்காது? கிருஷ்ணன் மட்டும் இதற்கு விதிவிலக்கா? “கதை சொல்லு,” என முரண்டு பிடிக்கும் தன் சுட்டிக் குட்டனுக்கு ஒரு கதை சொல்கிறாள் அன்னை யசோதை:

யசோதை: “ராமன் என்று ஒருவர் இருந்தாராம்.”

கிருஷ்ணன்: “ஊம்”

யசோதை: “அவருக்கு சீதை என்று ஒரு மனைவி இருந்தாளாம்.”

கிருஷ்ணன்: “ஊம்.”

யசோதை: “தகப்பனார் சொல்படி அவர்கள் இரண்டு பேரும் காட்டுக்குப் போய் பஞ்சவடி என்னும் இடத்தில் வசித்த போது ராவணன் என்ற ராக்ஷஸன் சீதையைத் தூக்கிக் கொண்டு போய்விட்டானாம்.” என்றாள்.

அவ்வளவு தான்! கிருஷ்ணன் குழந்தைக்குத் தன் முன்பிறப்பு ராம அவதாரத்தின் நினைவு வந்து விடுகிறது. இந்தப் பிறவி மறந்தும் போய் விட்டதோ!

கிருஷ்ணன்: “ஹே! லக்ஷ்மணா, எங்கே என்னுடைய வில்? அதை எடு, என்னிடம் கொடு. நான் ராவணனை வதம் செய்ய வேண்டும்” என்றானாம்.

இவ்வாறு பரபரப்பாக விழித்து எழுந்து பேசும் கிருஷ்ணனின் இந்தச் சொற்கள் நம்மைக் காப்பாற்றட்டும்.

Krishna Karnamrudham – 1

Once Yasoda was trying to put the child Krishna to sleep in the cradle. Every child wishes to hear a bed time story before sleep and Krishna is no exception. Mother Yasoda tells a story as Krishna was insisting.

Yasoda: “Once there was a man Rama lived in Ayodhya”

Krishna: “Hmm”

Yasoda: “Name of his wife was Seetha”

Krishna: “Hmm”

Yasoda: “According to the words of the father they lived in a forest called Panchavati”

Krishna was nodding: “Hmm”

Yasoda: At that time Ravana carried away Sita,

Suddenly Krishna got excited and uttered furious words –

“Hey Lakshmana , where is my bow? I want to destroy Ravana”

👣 Let these Krishna’s words protect us! 👣

📖 Sri KrishnaKarnamrudham – Slokam – 2.71 📖

“Ramo nama bhabhuva hoom , thadabala seethethi hoom thou pithur,
Vachaa Pancha vatee vane viharatha sthamahad ravana,
Nidhrartham janani kadhamithi hare hoonkarena srunwatha,
Soumithre , kwa dhanurdhanudhanurithi vyagraa gira panthu naa”

Note about Author Shri Leelasukar:

Sree Krishna Karnamrutham‘ is a work in Sanskrit by the poet Shri Bilvamangala Swami. There are 328 slokaas in this masterwork. He acquired the name ‘Leelasukar’ because of his becoming immersed in the Leela of Krishna!

#ஸ்ரீகிருஷ்ண_கர்ணாம்ருதம் #Krishna_Karnamrudham

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *