ராதாஷ்டமி
கண்ணன் ஆவணி அஷ்டமியில், ரோகிணி நட்சத்திரத்தில், மதுரா சிறைச்சாலையில் வசுதேவர்- தேவகி தம்பதியருக்கு நள்ளிரவு 12.00 மணிக்கு அவதரித்தார்.
அதற்கடுத்த சுக்லபட்ச அஷ்டமியில், விசாக நட்சத்திரத்தில், வ்ருஷபானு- கீர்த்திதா தம்பதிக்கு, பர்ஸானா என்னு மிடத்தில் நண்பகல் 12.00 மணிக்கு ராதை அவதரித்தாள்!
“க்ருஷ்னேன் ஆராத்ய த இதி ராதா
க்ருஷ்ணம் ஸமாராதயதி இதி ராதிகா‘
என்று ராதா உபநிடதம் கூறுகிறது.
“கண்ணன் வணங்கும் உருவம் ராதா; கண்ணனை வணங்கும் உருவம் ராதிகா’ என்று பொருள்.
கண்ணன் தீபமென்றால் ராதை ஒளி!
கண்ணன் சந்தனமென்றால் ராதை குளிர்ச்சி!
கண்ணன் மலரென்றால் ராதை மணம்!
“ராதே ராதே ராதே ராதே
ராதே கோவிந்தா! ”
Barsaana Sri RadhaRani Temple (Mandir) near Vindavan