ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

“நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே”
பொருள்: வணக்கத்திற்கு உரியவளும், மகா மாயை ஆனவளும், ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் வழிபட்டவளும், சங்கு, சக்கரம், கதை இவற்றைக் கையில் ஏந்தியிருப்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.
“நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே”
பொருள்: கருட வாகனத்தில் அமர்ந்தவளும் கோலாசுரன் என்னும் அசுரனுக்கு பயத்தைக் கொடுத்தவளும் சகல பாபங்களையும் போக்குபவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.
 
“சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே”
பொருள்: உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவள். அனைத்து வரங்களையும் அளிப்பவள். எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளும் எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.
“சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி பிரதாயினி
மந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே”
பொருள்: சிந்தனை, புத்தி, அறிவு, போகம் இவற்றைத் தருபவளும், மந்திர வடிவானவளும், எப்போதும் ஒளிமயமாகத் திகழ்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.
 
“ஆத்யந்த ரஹிதே தேவி ஆதி சக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக சம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே”
பொருள்: தொடக்கமும், முடிவும் அற்றவளும், முதல் சக்தியும், மஹேஸ்வரியும், யோகத்தினால் தோன்றியவளும், யோகத்தினால் அவதரித்தவளும், யோகத்துக்கும் பலமானவளான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.
“ஸ்தூல சூக்ஷ்ம மகா ரௌத்ரே மகாசக்தி மகோதரே
மகாபாப ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே”
பொருள்: கண்களுக்கு தெரிபவளும், புலப்படாதவளும், மிகுந்த ஆற்றல் உடையவளும், மகா பாவங்களைப் போக்குகிறவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.
“பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரஹ்ம ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே”
பொருள்: பத்மாசனத்தில் அமர்ந்தவளும் பரம் பொருள் ஆனவளும், பரமேஸ்வரியும், அகில உலகத்திற்கும் அன்னையுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.
 
“ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே 
ஜகஸ்திதே ஜகந்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே”
பொருள்: வெண்ணிற ஆடை தரித்தவளும், பல வித அலங்கரங்களால் சிங்கரிக்கப் பட்டவளும்,  உலகம் முழுதும் பரவியிருப்பவளும் உலகங்களுக்கெல்லாம் தாயுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.
பலஸ்ருதி
“மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர:
ஸர்வஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா”
பொருள்: மகாலக்ஷ்மி தேவியே உன்னைப் போற்றும் இந்த எட்டுத் துதிகளையும் மனப்பூர்வமாக தினமும் சொல்பவர் யாவும் வெல்பாராகவும் ராஜ்யங்களை அடைந்தாராகவும் இருப்பார்.
“ஏககாலே படேந் நித்யம் மஹாபாப விநாஸநம்
த்விகாலம் ய: படேந் நித்யம் தனதான்ய ஸமந்வித:
த்ரிகாலம் ய: படேந் நித்யம் மஹாஸத்ரு விநாஸநம்
மஹாலக்ஷ்மி பவேந் நித்யம் ப்ரஸந்ந வரதா ஸுபா”
பொருள்: தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும்.
தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும்.
தினமும் மூன்று  முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை எளிதாக வெல்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள்.
Sri Mahalakshmi Ashtakam (with meaning)
namosthesthu maha maye,
sree peede, sura poojithe,
sanka, chakra, gadha hasthe,
maha lakshmi namosthutheMeaning:
Salutations and salutations to Goddess Mahalakshmi,
Who is the great enchantress,
Who lives in riches,
Who is worshipped by Gods,
And who has conch, wheel and mace in her hands.namasthe garudarude,
kolasura bhayam kari,
sarva papa hare, devi,
maha lakshmi namosthutheMeaning:
Salutations and salutations to Goddess Mahalakshmi.
Who rides on an eagle,
Who created fear to Kolasura,
And is the goddess who can destroy all sins

sarvagne sarva varadhe,
sarva dushta bhayam karee,
sarva dukha hare, devi,
maha lakshmi namosthuthe

Meaning:
Salutations and salutations to Goddess Mahalakshmi.
Who knows everything,
Who can grant any thing,
Who appears fearsome to bad people,
And is the goddess who can destroy all sorrows.

sidhi budhi pradhe devi,
bhakthi mukthi pradayinee,
manthra moorthe, sada devi,
maha lakshmi namosthuthe

Meaning:
Salutations and salutations to Goddess Mahalakshmi,
Who grants intelligence and occult powers,
Who grants devotion to God and salvation,
Who can be personified by holy chants,
And who is Goddess for ever.

adhyantha rahithe, devi,
adhi shakthi maheswari,
yogaje yoga sambhoothe,
maha lakshmi namosthuthe

Meaning:
Salutations and salutations to Goddess Mahalakshmi.
Who neither has an end nor beginning,
Who is the primeval power,
Who is the greates Goddess,
Who is born out of hard penance,
And who can be personified by meditation.

sthoola sukshma maha roudhre,
maha shakthi maho dhare,
maha papa hare devi,
maha lakshmi namosthuthe

Meaning:
Salutations and salutations to Goddess Mahalakshmi,
Who is micro and also gross,
Who is most fearsome ,
Who is the greatest strength,
Who within her holds the worlds,
And is the Goddess who can destroy sins.

padmasana sthithe, devi,
para brahma swaroopini,
para mesi, jagan mathaha,
maha lakshmi namosthuthe

Meaning:
Salutations and salutations to Goddess Mahalakshmi,
Who is the goddess who has the seat of Lotus,
Who is the personification of the ultimate truth,
Who is Goddess of all,
And who is the mother of all the worlds.

swethambara dhare, devi,
nanalankara bhooshithe,
jagat sthithe, jagan mathaha,
maha lakshmi namosthuthe

Meaning:
Salutations and salutations to Goddess Mahalakshmi,
Who wears white cloth,
Who wears variety of ornaments,
Who is everywhere in the world,
And who is the mother of all the worlds.

Phalasruthi

maha lakmyashtakam stotram,
ya padeth bhakthiman nara,
sarva sidhi mavapnothi,
rajyam prapnothi sarvadha

Meaning:
Those men who read this octet praising Mahalakshmi,
With devotion and discipline,
Would make all powers as his own,,
And also would attain the kingdom for ever.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *