ஸ்ரீராமஜெயம்
முதன்முதலில் ராமநாமம் எழுதியவர்:
ஸ்ரீராமபிரான் ராவணணை போரில் வென்ற செய்தியை சீதையிடம் தெரிவிக்க முதலில் ஓடிவந்தவர் ஹனுமான். அவருக்கு சீதையைக்கண்டதும் உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் ஏதும் வரவில்லை. வெற்றிக் களிப்பில் சீதா தேவியின் முன் பணிந்து “அம்மா!’ என்று மட்டும் சொல்ல முயன்றார். ஆனால், நா தழுதழுத்ததால் சொல்ல வந்ததை மணலில் எழுத முயன்றார். சீதையின் முன் மணலில் “”ஸ்ரீராமஜெயம்” என்று எழுதிக் காண்பித்தார். அந்தக்குறிப்பைப் படித்த சீதை, ராமன் வெற்றி பெற்றதைத் தெரிந்து கொண்டாள்.
முதன் முதலில் “ஸ்ரீராமஜெயம்’ மந்திரத்தை எழுதியவர் ஹனுமான் தான்! அன்று முதல் நாமஜெபம் என்ற பெயரில் ராமநாமத்தை பனை ஒலைகளில், காகிதத்தில் எழுதும் வழக்கம் உண்டானது.
ஸ்ரீராமஜெயம் எழுதுவதோ, ராம நாமத்தை உச்சரிப்பதோ எவ்வளவு பெரிய பாவத்திலிருந்தும் நம்மை விடுவிக்கும் என்று சொல்வர். நாம் எதை எழுதத் தொடங்கினாலும் ஸ்ரீராமஜெயம்.. என எழுதியே தொடங்குவோம்.
இமயமலையின் இருந்து கன்னியாகுமாரிவரை, பக்தர்கள் பலர் ‘ராம்’, ‘ஸ்ரீ ராம’, ‘ஸ்ரீ சீதாராம்’, ‘ஸ்ரீ ஜெயராம்’, ‘ஸ்ரீ ராமஜெயம்’, என ராம நாமத்தை எழுதுவர். இதை அயோத்தி வால்மீகி பவனில் சேர்க்கவேண்டும். பின்னர் இந்த நோட்டு புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் அனைத்தும் வால்மீகி பவனில் சேகரிக்கப்பட்டு ஸ்ரீ ராமநவமி அன்று சரயு நதியில் சமர்ப்பிக்கப் படுகிறது!