திருப்பாவை பாசுரம் 17 – அம்பரமே


💐 திருப்பாவை பாசுரம் 17 – அம்பரமே 💐

கதவை திறந்ததும் கோபியர் உள்ளே சென்று, நந்த கோபனையும், யசோதையையும், பலராமரையும் சயனத்திலிருந்து எழுப்புதல்:

🎵 பாசுரம் 🎵

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்

எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே

எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்

அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகளந்த

உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா

உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.

🍀 பாசுர விளக்கம் 🍀

“வஸ்திரங்களையும், தீர்த்தத்தையும், சோற்றையும் தருமமாக அளிக்கின்ற எமக்கு ஸ்வாமியான நந்தகோபாலரே! எழுந்திருக்கவேண்டும்!

வஞ்சிக் கொடிக்கு கொழுந்து போல் முதன்மையானவளே!

எங்கள் குலவிளக்கே, எமக்குத் தலைவியானவளே! யசோதையே! விழித்துக்கொள்.

வானளாவிய ஓங்கி வளர்ந்த அனைத்துலகங்களையும்

அளந்த தேவர்களுக்கெல்லாம் தலைவனே எழுந்திரு!

பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழலை அணிந்த

பலராமா நீயும் உன் தம்பியான கண்ணனும் எழுந்திருக்கவேண்டும்!” 🌄

எடுத்தவுடன் கோபியர் கண்ணனை எழுப்பவில்லை. நந்தகோபனையும் யசோதையையும் உறக்கத்திலிருந்து எழுப்புகிறார்கள்.

கோபியர் நந்தகோபனின் கொடைச் சிறப்பைக் கூறி, அத்தகைய வள்ளல் தங்கள் வேண்டுகோளையும் அளிக்க உதவி செய்வான் என்ற குறிப்புடன் பேசுகிறார்கள். பிறகு யசோதையை அழைக்கிறார்கள். பிறகு கண்ணனை அழைக்கிறார்கள். கடைசியாகப் பலராமரைக் கூவி அழைத்து, அண்ணனும் தம்பியும் உறங்காமல் எழுந்திருந்து அருள் புரிய வேண்டும் என்கிறார்கள்.

🍀 Thiruppavai Pasuram 17 🍀

O king Nandagopala who gives food, water and shelter wake up!

O queen Yasodha, the foremost scion among women of sterling character the beacon light please rise up!

O lord of Gods! the one who grew up and pierced through the space and measured all the worlds!

O prince Balarama the one who adorned with gold anklets! may your younger brother and yourself get up from your sleep!

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *