திருப்பாவை பாசுரம் 18 உந்து மத


🌻 திருப்பாவை பாசுரம் 18 உந்து மத 🌻

🌅 நந்த கோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை எழுப்புதல்: 🌅

🎵 பாசுரம் 🎵

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்

கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்

வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்

செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

📖 பாசுர விளக்கம் 📖

மத யானையை மோதி தள்ளுகின்ற வலிமையும், போரில் பின் வாங்காத புஜபலத்தை யுடையவமுமான நந்தகோபாலன் மருமகளே! 🐘 நப்பின்னை பிராட்டியே! மணம் வீசும் கூந்தலை உடையவளே கதவைத்திற!

கோழிகள் சுற்றிலும் வந்து கூவுவதைக்கேள்!

மல்லிகைப்பூ கொடிப் பந்தலில் குயில்கள் பலமுறை கூவி விட்டன! 🐦

பந்தைத் தாங்கிய விரல்களையுடையவளே ! கிருஷ்ணன் பேர் பாட வந்துள்ளோம்! 🐾

உன் தாமரைக் கையால் வளையல்கள் ஒலிக்க

மகிழ்ச்சியுடன் வந்து கதைவை திறக்கவேணும்! 🌸


🌄 Thiruppavai Pasuram 18 🌄

” Please open the door! Nappinnai, Daughter-in-law of Nandagopala who has broad shoulders and invincible strength like that of a valiant tusker!

Look the cocks and crows everywhere;

cuckoos atop the bower of jasmine have cooed!

O lady with ball-clasping slender fingers

as we wish to sing your husband’s praise

May you come happily to open the door with your lotus-like hand making the bangles jingling softly!”

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *