திருப்பாவை பாசுரம் 19 – குத்து விளக்கெரிய


🌻 திருப்பாவை பாசுரம் 19 – குத்து விளக்கெரிய 🌻

“நப்பின்னையே! க்ஷணகாலமும் நீ கிருஷ்ணனின் பிரிவை சகிக்க மாட்டாயோ? இது தகுமோ?”

🎵 பாசுரம் 🎵

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்

மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

🌄 பாசுர விளக்கம் 🌄

நிலை விளக்குகள் ஒளிவீச, யானைத்தந்தங்களினாற் செய்த கால்களையுடைய கட்டிலிலே அழகு, குளிர்த்தி மென்மை, பரிமளம், வெண்மை என்னும் ஐந்து குணங்களையுடைய துமான மெத்தென்ற பஞ்சு படுக்கை மீது கொத்துக் கொத்தாக அலர்கின்ற பூக்களை யணிந்த கூந்தலை யுடையவளான நப்பின்னையின் மேல் தலையை வைத்து பள்ளி கொள்கின்ற அகன்ற திருமார்பையுடைய பிரானே! வாய்திறந்து பேசு!

மையிட்டு அலங்கரிக்கப் பெற்றதும் விசாலமுமான கண்ணையுடைய நப்பின்னாய்! நீ உன் மணாளன் கிருஷ்ணனை ஒரு நொடிப்பொழுதும் படுக்கையை விட்டு எழுந்திருக்க விடவில்லை. கணமாகிலும், நீ அவன் பிரிவை சகிக்க மாட்டாய்! ஆ! நீ இப்படி இருப்பது நியாமும் ஆகாது குணமும் ஆகாது.

🌹 Thiruppavai Pasuram 19 🌹

Speak, O Lord, sleeping in a room with a lamp of oil burning softly, on a soft cotton mattress over an ornate bed, sleeping in the company of the flower coiffured Nappinnai! May you, at least open your mouth!

Look, O Collyrirum eyed lady Nappinnai! you do not let your spouse rise even for a moment. You unwillingness to part with him even once, is neither fair nor just.

🌻 ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்! 🌻

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *