திருப்பாவை பாசுரம் 25 ஒருத்தி மகனாய்


🌷 திருப்பாவை பாசுரம் 25 ஒருத்தி மகனாய் 🌷

#கோதை_தமிழ்மாலை – வருத்தம் தீர்மாலை

“கிருஷ்ணா, நாங்கள் விரும்பியதைத் தந்தருளினால் வருத்தம் தீர்ந்து மகிழ்வோம்”

🎵 பாசுரம் 🎵

ஒருத்தி மகனாய்ப் பிறந்து

ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

📖 பாசுர விளக்கம் 📖

தேவகிக்கு மகனாய் பிறந்து அதே இரவில் யசோதைக்கு மகனாய் ஒளிந்து வளர்ந்துவர,

அதைப் பொறுக்காது உன்னைக் கொல்ல நினைத்த கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றாய்!

எங்கள் குறை தீர்க்கும்படி உன்னைப் பிரார்த்தித்துவந்தோம். விரும்பியதைத் தருவாயானால் பிராட்டி விரும்பும் உன் குணச்செல்வத்தையும் உன் வீரத்தையும் பாடி உன்னைப் பிரிந்து படுகிற துயரம் நீங்கி மகிழ்வோம்.


🌻 Thiruppavai Pasuram 25 – Meaning 🌻

O lord! You took birth in anonymity as Devaki’s child and Overnight grew up incognito as Yasoda’s Child.

You upset the despot king kamsa’s plans and kindled fire in his bowels.

We have come beseeching, grant us our desire We will rejoice singing in praise of your prosperity that befits Sri Lakshmi, your prowess. that we may end our sorrow and rejoice.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *