திருப்பாவை பாசுரம் 4 ஆழிமழைக்கண்ணா 1


நாடெங்கும் மழை நீரை பெய்யச்செய்து நாங்கள் மார்கழியில் மகிழ்ச்சியுடனே நீராடவேண்டும்:
திருப்பாவை பாசுரம் 4 To READ
ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல்
ஆழியுள்புக்குமுகந்துகொடார்த்தேறி,
ஊழிமுதல்வன்உருவம்போல்மெய்கறுத்து
பாழியந்தோளுடைப்பற்பநாபன்கையில்
ஆழிபோல்மின்னி, வலம்புரிபோல்நின்றதிர்ந்து,
தாழாதேசார்ங்கம்உதைத்தசரமழைபோல்
வாழஉலகினில்பெய்திடாய், நாங்களும்
மார்கழிநீராடமகிழ்ந்தேலோரெம்பாவாய்.

Thiruppavai pasuram 4 song – Click Play To LISTEN

 

— விளக்கவுரை—–
மண்டல வர்ஷத்துக்குத் தலைவனான வருணதேவனே! சிறுதும் ஒளிக்காமல்
கடலில் புகுந்துநீரை மொண்டு இடிஇடித்து ஆகாயத்தில் ஏறி
திருமாலின்திருமேனிபோல் கறுப்பாகி
அழகான தோள்கொண்ட பத்பநாபன்கையில்
உள்ளசக்கரம்போல் மின்னலடித்து, அவனுடையசங்கம்போல் அதிர்ந்துமுழங்க
உன்னுடைய வில்லாகிய சார்ங்கம் வீசியபாணங்ள் போல் மழை பெய்து
உலகம் அனைத்தும்வாழ, நாங்களும்
மகிழ்ந்து மார்கழிநோன்புக்குநீராடுவோம்.

THIRUPPAVAI – Pasuram 4 Meaning 
O lord Varuna! Pray reveal yourself in full measure
Enter the deep ocean, gorge yourself roar and ascend high darken like the hue of Padmanaba
strike lightning like the discus on his hands
roar with thunder like his great conch
come pouring down on us like arrows cast from his Sarnga bow that we too may live and
enjoy the bath-festival of Margazhi.

Srirangam-Ul-Andal-Sannadhi-Thiruvadipooram-Utsavam-2015-33

ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருவடிகளே சரணம்!


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

One thought on “திருப்பாவை பாசுரம் 4 ஆழிமழைக்கண்ணா