எழில் உடைய அம்மனைமீர்! * என் அரங்கத்து இன்னமுதர் *
குழல் அழகர் வாயழகர் * கண்ணழகர் *
கொப்பூழில் எழுகமலப் பூவழகர் * எம்மானார் *
என்னுடைய கழல் வளையைத் *
தாமும் கழல் வளையே ஆக்கினரே!
-ஸ்ரீ ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி – 11.2
பொருள்:
அழகுமிக்க தாய்மார்களே! என் அரங்கத்தின் இனிமையான அமுதர், திரு முடி அழகர், வாய் அழகர் கண் அழகர்! தனது திருநாபிக்கமலத்தில் இருந்து எழும் தாமரைப் பூ கொண்ட அழகர்!
அப்படியான என் பெரியபெருமாள் என்னுடைய கழல்வளையலைத் தாமும் என் கைகளில் கழல்கின்ற (கழன்று /நெகிழ்ந்து ) விழுகின்ற வளையல் ஆக்கி விட்டாரே
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ ரெங்கமன்னார் திருவடிகளே சரணம்!
(photo courtesy Shri DevathiRajan swami)