நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன்


ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிய  திருநெடுந்தாண்டகம் 

நாயிகா பாவம் – பரகால நாயகி

திருமங்கையாழ்வார் பரகால நாயகியாக ஸேவை – திருவாலி திருநகரி

18 ஆம் பாசுரம்

“கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம்

பார்வண்ண மடமங்கை பத்தர் பித்தர்
பனிமலர்மேல்பாவைக்குப் பாவம் செயதேன்!

ஏர்வண்ணன் என்பதை என்சொல் கேளாள்
எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்

நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்
இதுவன்றோ நிறையழிந்தார் நிற்குமாறே”

விளக்கம்:
பரகால நாயகியின் திருத்தாயார் தன் பெண்பிள்ளையின் வாய்வெருவுதல்களை வரிசையாகச் சொல்லுகிற பாசுரம்.

“பாவியான என்னுடைய அழகியவடிவையுடைய பெண்ணானவள் என் வார்த்தையைக் கேட்கிறாளில்லை;
(எம்பெருமானது) திருமேனி காளமேக நிறத்து என்கிறாள்;
(அவனது) திருக்கண்களும், திருவாயும், திருக்கைகளும், திருவடியிரண்டும் தாமரைப்பூப்போன்ற நிறமுடையன என்கின்றாள்;
பார் வண்ணம் மடமங்கை பத்தர் என்னும் அதாவது (அவர்) பூமிப்பிராட்டி இட்ட வழக்காயிருப்பர் என்கின்றாள்;
பனி மலர் மேல் பாவைக்கு பித்தர் என்னும் அதாவது குளிர்ந்த செந்தாமரைப் பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார் விஷயத்தில் வியாமோஹங் கொண்டவர் என்கின்றாள்;
என்னை அடிமைப்படுத்திக் கொண்ட பெருமானுடைய திருவரங்கம் எங்குள்ளது? என்கின்றாள்;
நீர் வண்ணப் பெருமாள் எழுந்தருளியிருக்கிற திருநீர் மலைக்கே போகக்கடவேன் என்கின்றாள்;
அடக்கமழியப் பெற்றவர்களின் நிலைமை இங்ஙனே போலும்!” திருத்தாயார் சொல்கிறாள். 

Thirunedunthandakam pasuram 18 – Meaning

“My fair daughter does not listen to me, I have sinned, She sings, “My dark hued Lord has eyes, lips, hands and feel like petals of lotus. He is devotes to the bright Dame Earth on his side, and infatuated by the fresh-lotus dame Lakshmi as well.  He resides in Srirangam”, “Where is it?” she inquires, then declared she is proceeding to his abode in Tirunirmalai.  Is this not proof that she has lost her steadiness?”

ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்! 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *