திருப்பாவை தனியன் – ஸ்ரீ பராசர பட்டர் அருளியது
நீளாதுங்க ஸ்தநகிரிதடீ ஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஶ்ருதி ஶத ஶிரஸ்ஸித்தமத்யா பயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம் யா பலாத்க்ருத்யபுங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய:
திருப்பாவை தனியன் – ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளியது
அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்கு *
பன்னு திருப்பாவைப் பல்பதியம் * – இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை
சூடிக்கொடுத்தாளை சொல்லு.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை *
பாடியருள்ள வல்ல பல்வளையாய்! * – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதியென்ற இம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
Thanks a lot for this web creator.. Very useful wanted more like this.. Once again thanks… Andal thiruvadigalea charanam you 🙏🙏🙏🙏🙏🙏
Thank you for the kind words. You may be interested to see this Thiruppavai Sonnet created by adiyen based on inspiration and blessings from Shri Venkatesh Swamy and Smt. Haripriya Ammangar (Both of them are scholars and great Upanyasakars)
https://mylittlekrishna.com/thiruppavai/thiruppavai-sonnet/
🙇🏻♂️🙏🏻தந்யோஸ்மி ஸ்வாமி..அருமை..
ஸ்ரீ ஆண்டாள் க்ருபை. அடியேன் ராமானுஜ தாஸன்.