A Sonnet on திருப்பாவை


ஸ்ரீ :

ஸ்ரீமதே இராமாநுஜாய நம: ஸ்ரீ கோதாயை நம:

A Sonnet on திருப்பாவை

மாயனுக்குஉகந்த மாஸானாம் மார்க்கசீர்ஷ மார்கழியில் மகிழ்ந்து
பகவத – பாகவத கைங்கர்ய நீராட்டத்தில் பரவசமாக்கும் மகிழ்மாலை

பரந்தாமன் பறைதருவான் நமக்கேஎன பாரோர் புகழ்ந்து
ஆழ்வார்கள் அருளிச்செயலை விஞ்சிநிற்கும் தூய தமிழ்மாலை

பொற்றாமரை அடியை போற்றிப்பாடி பரமடி காட்டும்
பட்டர்பிரான் கோதை சொன்ன பாரோர் புகழ்மாலை

போயபிழை மாயச்செய்து பாதகங்கள் தீர வழி காட்டும்
‘உய்யும்ஆறு எண்ணி’ என அருளி உஜ்ஜீவிக்கும் உய்வுமாலை

இன்னிசையால் பாடிக்கொடுத்த பாமாலையால் எங்கும் இன்புறச்செய்து
ஞானபக்திச் செல்வம் நீங்காது நிறையச்செய்யும் செல்வமாலை

வான்போகம் இகழ்ந்து ஆழ்வார் திருமகளாராய் அவதாரம் செய்து
ஐயைந்தும் ஐந்தும்அருளி ஐயம் தீர்க்கும் திருநாம மாலை

வில்லைத்தொலைத்த புருவத்தாள் கோதை உரைத்த சங்கத்தமிழ்மாலை
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் வேயர் புகழ் கோதைத் தமிழ்மாலை


சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

வாசக தோஷம் க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

– அடியேன் இராமானுஜ தாஸன் – குருகூர் கண்ணன் (Facebook: kannan.iit)

✍️ #Tamil_Sonnet_on_thiruppavai

Note: The sonnet is a fourteen-line poem, which uses a specific rhyme scheme and structure. There are different types of Sonnet – 1) Italian, 2) Shakespearean 3) Modern, etc. This post is more similar to Shakespearean mixed with Modern type, focusing on simple ‘ending-line’ rhyme scheme. A modest attempt by Adiyen. The objective is to praise the glories of Sri Andal and Thiruppavai.

🙏 Thanks to wonderful Inspiration from ஸ்ரீ உ.வே திருக்குடந்தை வேங்கடேஷ் ஸ்வாமி and Smt Haripriya Devanathan Madam.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *