ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 8 2


🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹

ஸ்வாமி நம்மாழ்வாருடைய ஸ்ரீ ஹஸ்த முத்ரையை ‘சடாரி ஹஸ்த முத்ரிகா’ என வர்ணிக்கும் அற்புதமான ஸ்லோகம்.

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் கடைசி ஸ்லோகங்கள்

ஸ்லோகம் 8

நமஜ்ஜனஸ்ய சித்த பித்தி, பக்தி சித்ர தூலிகா

பவார்ஹி வீர்ய பஞ்சநே, நரேந்த்ர மந்த்ர யந்த்ரனா |

ப்ரபன்ன லோக கைரவ, ப்ரஸந்ந சாரு சந்த்ரிகா

சடாரி ஹஸ்த முத்ரிகா, ஹடாத்கரோதுமே தம: | |

பொருள்:

தம்மை வணங்குபவர்களுடைய ஹ்ருதயம் ஆகிற சுவரிலே பக்தியாகிற சித்திரத்தை எழுதும் கருவியாகவும் – காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய வீர்யத்தைத் தணிக்கும்
விஷயத்தில் விஷ வைத்தியனுடைய (நரேந்திர -விஷ வைத்தியன்) மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும் நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு -வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்.

பிரபன்ன ஜனங்கள் ஆகிற ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல அழகிய நிலாப் போன்றதையும் இருக்கிற நம்மாழ்வாருடைய திருக் கைத்தல முத்ரையானது (உபதேச முத்திரை) என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து போக்கி அருள வேணும்.


ஸ்லோகம் 9 (சில கோயில்களில் இந்த 9வது ஸ்லோகத்தையும் பெரியோர்கள் ஸேவிப்பர்) 

வகுளாலங்க்ருதம் ஸ்ரீமச்சடகோப பதத்வயம் |

அஸ்மத்குல தனம் போக்யுமஸ்து மே மூர்த்நி பூஷணம் | |

பொருள்: மகிழ மலர்களினால் அலங்கரிக்கப் பட்டதும்
எமது குலச் செல்வமும் பரம போக்யமுமான
ஆழ்வார் திருவடி இணையானது எனது சென்னிக்கு
அலங்காரம் ஆயிடுக.


Sri Paraangusha Ashtakam Slokam 8

“Namajjanasya chittabhitti bhaktichitra toolikaa

Bhavaahiveeryabhanjanena narendramantra yantranaa |

Prapanna loka kairava prasanna chaaruchandrikaa

Shataari hasta mudrika hataatkarotu me tamah | |

Slokam 9
Vakulalangrutham sreemach sadakopa batatvayam |
Asmath kulathanam bokyumastu me moorthni bhooshanam | |


ஒவ்வொரு மாதமும் ஸ்வாமி நம்மாழ்வாருடைய திருநக்ஷத்ரமான விசாகம் அன்று  ஸ்ரீ பராங்குச அஷ்டகம் சொல்வது சிறப்பு.

-அடியேன் இராமானுஜ தாஸன் திருக்குருகூர் கண்ணன்

ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

Swamy Nammazhwar – Thirukkurukoor

—– ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸம்பூர்ணம் ——

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

2 thoughts on “ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 8