கண்ணனிற் கொடியது அவன் குழலோசை!


நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி பாசுரம் (3876) 

பாசுரம்:

புதுமணமுகந்துகொண்டெறியுமாலோ பொங்கிளவாடை புன்செக்கராலோ

அதுமணந்தகன்ற நங்கண்ணன்கள்வம் கண்ணனிற்கொடி தினியதனிலும்பர்

மதுமணமல்லிகைமந்தக்கோவை  வண்பசும்சாந்தினில் பஞ்சமம்வைத்து

அதுமணந்தின்னருளாய்ச்சியர்க்கே யூதுமத்தீங் குழற்கேயுய்யேன் நான்.

விளக்கம்:

எங்கிருந்தோ பொங்கி வரும் ஒரு இள வாடை, அது மல்லிகையின் மணத்தைச் சுமந்து வரும். கொஞ்ச நேரம் வரும் சின்னமாலைப் பொழுது பெருந்துயரத்தைத் தந்து போகிறது. அப்படி கலந்து பிரிந்த நமது க்ருஷ்ணனுடைய கள்ளச் செயல்கள் கள்வம் அவனிற்காட்டிலும் கொடியதாயிரா நின்றது கொடிது. இன்னமும் அதுக்குமேலே மதுவையும் மணத்தையுமுடைத்தான மல்லிகையினுடைய மெல்லிய ஸரமென்ன, அழகிய குளிர்ந்த சந்த மென்ன, இன் அருளுடைய ஆய்ச்சியர்க்கே அவன் குழல் ஊதுகிறான். பஞ்சம ராகத்தை வைத்து ஊதுகின்ற அத்தீங்குழலோசை யொன்றே நின்று என்னை முடிக்கினறது அந்தோ!  என் செய்வேனென்

The cool fragrant breeze, and the fading red clouds are more wicked than that Krishna who played tricks on me and left. Now the sweet Panchama he pays on his flute for the Gopis in his favor with honey-jasmine garlands and cool Sandal paste, is more than I can bear

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *