பானைக்குள் கன்றைத் தேடிய கண்ணன்!


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 3

யசோதையிடம் தினமும் கிருஷ்ணனை பற்றி கோபிகைகள் புகார் சொல்வது பழக்கமாகிவிட்டது. அதாவது இந்த குழந்தை ‘வெண்ணெய் திருடினான்’; ‘தயிரைத் திருடித் தின்றான்’; ‘கன்றுகளை அவிழ்த்துவிட்டான்’. இது போல பல புகார்கள். அதற்கேற்றாற்போல் இந்த பாலகன் செய்வதைப் பாருங்கள்.

கிருஷ்ணன் வெண்ணெய் எடுக்கும்போது திடீரென்று கோபி வந்து விட்டாள். எப்படி சமாளிக்கிறான் அவன்!

கோபிகா: “குழந்தாய்! நீ யார்?”

கிருஷ்ணன்: “நான் பலராமனின் இளைய சகோதரன்.”

கோபிகா:“நீ எங்கு வந்தாய்?”

கிருஷ்ணன்:“என் வீடு என்று நினைத்து வந்துவிட்டேன்”

கோபிகா: அப்படியா?

கிருஷ்ணன்:“நான் காணாமற்போன பசு கன்றைத் தேடிவந்தேன்.”

கோபிகா:“ஆனால் நீ அதற்காகக் கவலைப்பட வேண்டாம்!”

கிருஷ்ணன்: “சரி, கோபி தாயே!”

கோபிகா:“அது சரி, கன்றைத தேடி வந்த உன்னுடைய கை ஏன் என் வெண்ணெய்ப் பாத்திரத்தில் உள்ளது?”

கிருஷ்ணன்: “வெண்ணெய்ப் பாத்திரத்தில் உள்ளே கன்று இருக்கான்னு பார்த்தேன்”

கோபிகா: “ஓ! இந்த பாத்திரத்தினுள் எப்படி கன்று இருக்கும்!?”

கிருஷ்ணன்: “அதான் இல்லைனு கைய வெளியே எடுக்கிறேன்”

இப்படிப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் நம்மைக் காப்பாராக!

🐮 Sri Krishna Karnamrutham 3 🐮

How Krishna manages when he was caught stealing butter in Gopika’s house. Conversation goes like this:

Gopi: “Who are you child?”

Krishna: “I am the brother of Balarama” replied.

Gopi: “Why are you in my house”

Krishna: “I thought it is my house”

Gopi: “Oh Is it?”

Krishna: “I was looking for the missing calf”

Gopi: “You do not need to worry about that”

Krishna: “Ok”

Gopi: “why are you keeping your hand in butter pot”

Krishna: “I was looking for the missing calf there”

Gopi: “How can you find a calf inside the pot!?”

Krishna: “That is why I am taking my hand out”

And let this conversation between Krishna and Gopi protect us.

Sri Krishna Karnamrutham – slokam – 2.82

"kastvam bAla balAnujaH kim iha te manmandirAshaNkayA
yuktam tat navanItapAtravivare hastam kim artham nyaseH
mAtaH kaNcana vatsakam mRigayitum mA gA viShAdam krishaNA
Diti evam varavallavI prativacaH kriShNasya puShNAtu naH"

ஸ்ரீ கிருஷ்ணா கர்ணாம்ருதம் – ஸ்ரீ லீலா சுகர் அருளியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *