திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 9

ஸ்ரீமதே இராமாநுஜாய நம:

ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் – திருக்கோளூர்

தேவுமற்றறியேன் குருகூர் நம்பி” என ஸ்வாமி நம்மாழ்வாரைப் போற்றிய ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அவதரித்த ஸ்தலம் திருக்கோளூர். இந்த திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாளை ஸேவிக்க எம்பெருமானார் ஸ்ரீ இராமானுஜர் ஆழ்வார்திருநகரியிலிருந்து எழுந்தருளும்போது ஒரு பெண்பிள்ளை திருக்கோளூரை விட்டு வெளியூர் செல்ல புறப்பட்டாள்.

உடனே இராமானுஜர் அப்பெண்பிள்ளையிடம் ” ‘புகும் ஊர்‘ என்று போற்றப்படும் இந்த திருக்கோளூரை விட்டு நீ வெளியே செல்வதற்கான காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு அந்த பெண்பிள்ளை “ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன?” என்று சொல்லி 81 வைஷ்ணவ அடியார்களின் அருஞ்செயல்களைக் கூறி, “அப்படிப்பட்டவர்களின் வைணவ நலங்கள் எனக்கு வாய்க்கவில்லையே!” என்று கூறி வருந்தினாள். இந்த பெண்பிள்ளை கூறிய வாசகங்களின் மறைப்பொருளைக் கொண்ட நூல் ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம்‘. இது வைஷ்ண ரகஸ்ய கிரந்தங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

ஸ்ரீ ராமானுஜரும், திருக்கோளூர் பெண்பிள்ளையும்

ஸ்ரீ இராமானுஜரும், திருக்கோளூர் பெண்பிள்ளையும்.. (Photo credits to Shri Devathirajan swamy)

ஸ்ரீரங்கம் ஜீயபுரம் ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் இந்த பெண்பிள்ளை ரகஸ்யம் ஒவ்வொன்றையும் நாம் எளிதில் அறிந்து கொண்டு ஸ்ரீவைஷ்ணவ அடியார்களைப் போற்றும்படியாக மிக இனிமையாக அர்த்த விசேஷங்களுடன் அருளிச்செய்துள்ளார்.  ஸ்ரீ உடையவர் க்ருபா கடாக்ஷத்துடனும், ஆசார்யர் அனுக்ரஹத்துடனும் அந்தநல்லூர் அக்ரஹாரத்தில் குழந்தைகளுக்கு திவ்ய பிரபந்தம் கற்றுக் கொடுப்பது போன்ற கைங்கர்யங்களைச் செய்து வருகின்ற இவர் திருவெள்ளறை மேலத்திருமாளிகை அம்மாள்ஆசார்யர் சிஷ்யர். இவ்வாறு பல கைங்கர்யங்களை செய்து வருகின்ற ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்காருக்கு பல்லாண்டு பல்லாண்டு!

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் – அவதாரிகை 1

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் – அவதாரிகை 2

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் – அவதாரிகை 3

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 1 – “அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரை போலே?”

கண்ணுக்கு இனியன கண்டோம்‘ என்று மகிழ்ந்து போற்றும்படியாக அற்புதமான அலங்காரங்களைச் செய்து நம்மை ஆச்சரியப் படுத்தும் ஸ்ரீ தேவாதிராஜன் ஸ்வாமிக்கு பல்லாண்டு!

ஸ்ரீரங்கம் ஜீயர்புரம் ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 2 – அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே?”

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 3 “தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே?”

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 4 – “தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே?”

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 5 –   பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 6 பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 7 – தாய்க்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 8 – தந்தை எங்கே? என்றேனோ துருவனைப்போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 9 – மூன்றெழுத்து சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப்போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 10 – முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 11 – பிஞ்சாய் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 12 –எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 13 – ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 14 – நான் சிறியனென்றேனோ ஆழ்வாரைப் போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 15 – ஏதேனும் என்றேனோ குலசேகரர் போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 16 – யான் ஸத்யமென்றேனோ க்ருஷ்ணனைப் போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

ரகஸ்யம் 16 – யான் ஸத்யமென்றேனோ க்ருஷ்ணனைப் போலே? – Part 1

ரகஸ்யம் 16 – யான் ஸத்யமென்றேனோ க்ருஷ்ணனைப் போலே? – Part 2

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 17 – அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 18 – அந்தரங்கம் சொன்னேனோ திரிஜடையைப் போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 19 – அவன் தெய்வமென்றேனோ மண்டோதரியைப் போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 20 – அஹம்வேத்மி என்றேனோ விச்வாமித்திரரைப் போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் – 21 to 40 வாசகங்களின் விளக்கவுரையைக் கேட்க இந்த பக்கத்திற்கு செல்லவும். Click here

Photo Credits: இந்த திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் ஒவ்வொன்றுக்கும் மிக்க ப்ரயத்தனத்துடன் அற்புதமாக அலங்காரம் செய்து நம்மை ஆனந்தப்படும்படியாகச் செய்யும் ஸ்ரீ தேவாதிராஜன் ஸ்வாமிக்கு பல்லாண்டு. Shri Devathirajan swamy’s Facebook profile –  Sow baktha Gopala

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

9 thoughts on “திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம்