அடையார் கமலத்து அலர்மகள்


ஸ்ரீரங்கம் பெரிய பிராட்டியான திருமாமகள் திருநாமங்கள்

அடித்தாமரை மலர்மேல் மங்கை
அடையார் கமலத்து அலர்மகள்
அணிமாமலர் மங்கை
அம்புருவ வரி நெடுங்கண் அலர் மகள்
அம்புயத்தாள்
அரவிந்தப் பாவை
அரை செய் மேகலை அலர் மகள்
அலர்மேல் மங்கை
அல்லி மலர்த் திரு மங்கை
அல்லி மாமலர் மங்கை
அல்லி மாதர்
இளங்கொடி
இன்னமுதத் திருமகள்
இன்னிள வஞ்சிக்கொடி
உருப்பிணி நங்கை
உன் திருமார்வத்து மாலை நங்கை
எழில் திரு
எழிலார் திரு
ஏறு திரு
ஒசிந்த ஒண் மலராள்
ஒலி திரைநீர் பௌவம் கொண்ட திரு
ஒரு மதி முகத்து மங்கையார்
கமல மலர்ச் செய்யாள்
கலையிலங்கு மகலல்குல் கமலப்பாவை
காந்தள் முகிழ் விரல் சீதை
கிளிமொழியாள்
குலமாமகள்
கூந்தல் மலர் மங்கை
கொம்புபோல் சீதை
கொடியேரிடையாள்
கோவை வாயாள்
கொம்புராவு நுண்ணேரிடையாள் செய்ய நெடுமலராள்
கோதை நறுமலர் மங்கை
கோகனகத்தவள்
கோலத்திரு மாமகள்
கோல மலர்ப் பாவை
சங்கு தங்கு முன்கை நங்கை
செழுங் கடலமுதினில் பிறந்த அவள்
செய்யாள்
சுரிகுழல் கனிவாய்த் திரு
ஞாலப் பொன் மாது
தன்னாகத் திருமங்கை
தாமரையாள்
தாமரைச் செம்மலர் மேல் மாது
தாமரை மங்கை
தாமரை மேல் மின்னிடையாள்
திரு
திருமகள்
திவளும் வெண்மதி போல் திருமுகத்தரிவை
திருமடந்தை
திருமங்கை
திருமாமகள்
திருமகளார்
தெய்வத் திரு மாமலர் மங்கை
தேனார் மலர் மேல் திருமங்கை
தேனார் கமலத் திருமாமகள்
தேனுலாவும் மென் மலர் மங்கை
தேனமரும் பூமேல் திரு
தோடுலா மலர் மங்கை
நன்மகள்
நாண் மலராள்
நம் பங்கயத்தாள்
பண்ணுலாவு மொழிப்படைத் தடங்கணாள்
பண்ணை வென்ற இன்சொல் மங்கை
பந்திருக்கும் மென்விரலாள் பாவை
பனி மலராள்
பனி நன் மாமலர்க் கிழத்தி
பங்கயத்தாள்
பவளவாய்ப் பூமகள்
பங்கய மாமலர்ப் பாவை
பாவை பூமகள்
புணர்த்த திரு
புண்டரீகப் பாவை
புனங்கொள் மென்மயில்
பூ மங்கை
பூமகள்
பூவார்  திருமாமகள்
பூ மேல் மாது
பூ மகளார்
பூ வளரும் திருமாது
பூம்பாவை
பூவின் மேல் மாது
பூவின் மிசை நங்கை
பூவில் வாழ் மகள்
பூங்கோதையாள்
பூமேய செம்மாது
பூவினை மேவிய தேவி
பூ மன்னு மாது
பெருந்தேவி
பெருமகள் பேதை மங்கை
பொற்றாமரையாள்
பொன் பாவை
போதில் மங்கை
போதார் தாமரையாள்
போதமர் செல்வக் கொழுந்து
போதமருந் திருமாது
மன்னு மாமலர்க் கிழத்தி
மடவரல் மங்கை
மலர் மாமங்கை
மலர் மங்கை
மட மகள்
மலராள்
மடந்தை வண்கமலத் திருமாது
மலர் மேலுறைவாள்
மலர் மாதர்
மன்னு மலர் மங்கை
மாமலராள்
மானேய் நோக்கி மடவாள்
மார்வில் திரு
மைதிலி
மைய கண்ணாள்
மையார் கருங்கண்ணி
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கை
வல்லி நாண்மலர்க் கிழத்தி
வம்பவிழ் போதமர் மாதர்
வல்லியிடையாள்
வண்டார் பூ மாமலர் மங்கை
வண் கமலத் திருமாது
வடிவிணையில்லா மலர் மகள்
வடிக்கோல வாள் நெடுங்கண் மாமலராள்
வாராளும் இளங்கொங்கை நெடும்பணைத் தோள் மடப்பாவை
வாள் நெடுங்கண்ணி மதுமலராள்
வாசம்செய் பூங்குழலாள் திரு
வில்லேர் நுதல் வேல் நெடுங்கண்ணி
விற்புருவக் கொடி
வெறிதரு பூமகள்
வெறியாரு மலர்மகள்
வேரி மாறாத பூவிலிருப்பாள்

SriRanganayakiThayar2

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *