🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹
ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2 (ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது)
பக்தி ப்ரபாவ பவதத்புத பாவபந்த
ஸந்துக்ஷித ப்ரணயஸார ரஸௌக பூர்ண: |
வேதார்த்த ரத்ன நிதிரச்யுத திவ்ய தாம
ஜீயாத் பராங்குச பயோதிர ஸீம பூமா ||
🌻 பொருள்:
“பக்தியின் கனத்தால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப் பட்ட சிறந்த ப்ரணயம் ஆகிற தீர்த்த பிரவாஹத்தாலே நவரச சமூஹத்தாலே நிறைந்ததாயும் –
வேதப் பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும் எம்பெருமானுக்கு திவ்யமான அளவில்லாத பெருமையை யுடைதாயும் இருக்கிற நம்மாழ்வார் ஆகிற கடல் நெடுநாள் வாழ வேணும்”
🍀 Paraankushaashtakam – Slokam 2
Bhaktiparabhaaava bhavadadbhuta bhaavabandha
Sandhukshita pranayasaara rasougha poornah |
Vedaartha ratnanidhirachyuta divyadhaama
Jeeyaat paraankusha payodhiraseema bhooma ||
‘பக்தாம்ருதம் .. ‘ – தனியனில் ‘நமாம் யஹம் திராவிட வேத சாகரம்’ – என்று திருவாய்மொழியைக் கடலாகக் கூறினர் பூர்வாசார்யர்கள். கடல் போன்று அளவுகடந்த, சிறந்த குணங்களால் பெருமை வாய்ந்த ஸ்ரீ நம்மாழ்வார் வாழியே!
🙏 ஸ்ரீ வகுள பூஷண பாஸ்கரர் திருவடிகளே சரணம்! 🙏
ஸ்ரீ நம்மாழ்வார் புஷ்ப அங்கி சேவை, திருக்குருகூர்