ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 3 & 4


🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹

அடுத்து வரும் இரு ஸ்லோகங்கள் ஸ்ரீ பராசர பட்டர் அருளியவை.
ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 3

ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண
த்ருஷ்ணா தத்வமிவோதிதம் |

ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத்
த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் ||

🌻 பொருள்:
எந்த ஒரு முனிவர் – ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்களை யுடையதான திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை சாஷாத் கரித்தாரோ,
கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்று சொல்லும்படியான அந்த சடகோப முனிவரை ஸேவிக்கிறோம்!


ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4

யத்கோஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர: |

யந்மண்டலம் ஸ்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய ||

🌻 பொருள்:
சூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே யாவர் ஒரு ஆழ்வார் உடைய ஆயிரம் பாசுரங்கள் சகல சேதனர்களுடையவும் அகவிருளைத் தொலைக்கின்றனவோ,
சூர்யன் இடத்தில் நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல் அப்பெருமான் யாவர் ஒரு ஆழ்வார் இடத்தில் அவ்விதமாகவே உறைகின்றானோ,
வேத ப்ரதிபாத்யமான சூர்ய மண்டலத்தை அந்தணர்கள் வணங்குவது போலே யாவரொரு ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம் செவிப்பட்ட யுடனே பரம பாகவதர்கள் கை கூப்பி வணங்குவார்களோ –
அப்படிப்பட்ட நம்மாழ்வார் ஆகிற சூர்யனை வணங்குவோமாக!


🍀 Paraankushaashtakam – Slokam 3 & 4 (Composed by Sri Paraasara Bhattar)
Rishim jushaamahe Krishna
Trishnaa tattvamivoditam |
Sahasrashaakhaam yo draaksheet
Dhraavideem brahmasamhitaam ||  (3)

Yadgosahasramapahanti tamaamsi pumsaam
Narayano vasati yatra sa shankhachakrah |
Yanmandalam shrutigatam pranamanti vipraah
Tasmai namo vakulabhooshana bhaaskaraaya ||   (4)


“கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேனுள்ளானே” – அப்படிப்பட்ட எம்பெருமானைத் தம்மிடத்தே கொண்டவர் ஸ்ரீ நம்மாழ்வார்!

ஸ்ரீ வகுளாபரணன் திருவடிகளே சரணம்

Go to  Slokam 5

Swamy Nammazhwar – Thirukkurukoor

🙏 ஸ்வாமி நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!  🙏

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *